ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி சண்டை8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; 7 வீரர்களும் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் குந்துஸ் மாகாணத்தில் குவாலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானின் குந்துஸ் மாகாணத்தில் குவாலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் ராக்கெட் குண்டுகளை வீசி எறிந்த அவர்கள், தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அதன் பின்னர் அவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.
இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே சமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.dailythanthi.com
Link to Original Post : https://www.dailythanthi.com/News/World/2019/03/08013342/Gun-fight-in-Afghanistan8-terrorists-shot-dead7-soldiers.vpf
Post a Comment