Header Ads

Ads Bar

மேடை சரிந்தது: பா.ஜ., நிர்வாகிகள் காயம்


லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் நகரில், பாஜ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடை சரிந்த விபத்தில் நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் நகரில், ஹோலி பண்டிகையை ஒட்டி, பாஜ விவசாயிகள் அணி சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பலரும் மேடையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மேடை சரிந்து விபத்துக்குள்ளானது.

மேடை சரிந்ததால், அங்கு நின்று கொண்டிருந்த நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், பலருக்கு காயம் ஏற்பட்டது. விவசாயிகள் அணித் தலைவர் அவ்தேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://dinamalar.com

Link to Original Post : https://m.dinamalar.com/detail.php?id=2239619

No comments

Powered by Blogger.