Header Ads

Ads Bar

ரூ.1,460 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கம் பறிமுதல்

புதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் இதுவரை ரூ.1,460 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், காலியாக உள்ள, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல் தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில் நாடு முழுவதும் பறக்கும்படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.1,460 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.208.55 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.dinamalar.com/news_detail.asp?id=2246271

No comments

Powered by Blogger.