புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு
தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் தாரிக் இன்று (04) அறிவித்தார்.
அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கும் அமைய,நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பழைய விலை. புதிய விலை.
1- உள்ளூர் சம்பா அரிசி 88/= 84/=
2- சிவப்பு அரிசி 59/= 57/=
3- வெள்ளைப்பச்சை அரிசி 0/= 67/=
4- வெள்ளைச்சீனி 99/= 97/=
5- நெத்தலி 680/= 669/=
6- டின் மீன். 200/= 195/=
7- பெரிய வெங்காயம். 79/= 74/=
இதே வேளை சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 15 சதொச கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று (04) களுத்துறை தனமல்விலயில் இரண்டு கிளைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .
அத்துடன் தற்போது 411 ஆக இருக்கும் சதொச கிளைகள் இவ்வருட முடிவுக்குள் 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : http://www.virakesari.lk/article/53376
Post a Comment