Header Ads

Ads Bar

ஹோட்டல் அறையிலிருந்து சுவீடன் பெண் சடலமாக மீட்பு

சுவீடன் நாட்டிலிருந்து இலங்கைக்கு தனது கணவருடன் சுற்றுலா வந்த பெண் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுவீடன் நாட்டுப் பிரஜை என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி சுவீடன் நாட்டிலிருந்து தனது கணவருடன் சுற்றுலா வந்து காலி உனவட்டுன பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த பெண் இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலத்தில் காயங்கள் உள்ளதால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : http://www.virakesari.lk/article/53470

No comments

Powered by Blogger.