Header Ads

Ads Bar

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி: சிக்கலில் தவிக்கும் மீனவர்களின் நம்பிக்கையை பெறப்போவது யார்?

ராமநாதபுரம்படத்தின் காப்புரிமைINDIAPICTURES
(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழ் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறது. அந்தத் தொடரில் இன்று ராமநாதபுரம்...)
"வானம் பார்த்த பூமி" என்று அறியப்படும் ராமநாதபுரம் தொகுதி, 1951ஆம் ஆண்டு, அதாவது முதல் பொதுத்தேர்தலில் இருந்தே கவனம் பெற்றிருக்கிறது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொழியும் வடகிழக்குப் பருவ மழையை தவிர, ஆண்டு முழுவதும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலையே அங்கு காணப்படும்.
ஏர்வாடி தர்கா, இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேஸ்வரம், இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலமான பாம்பன் பாலம் என பல முக்கிய இடங்களை கொண்டுள்ளது ராமநாதபுரம்.
ராமநாதபுரம்படத்தின் காப்புரிமைINDIAPICTURES
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 1951 முதல் 2014 வரை இடைத்தேர்தல் உள்பட 16 தேர்தல்களை சந்தித்திருக்கிறது.
இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த ஏபிஜே அப்துல் கலாம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
தற்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடனை, ராமநாதபுரம் மற்றும் முதுக்குளத்தூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகப்ப செட்டியார் வென்றார். கடைசியாக நடைபெற்ற 2014 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா வெற்றி பெற்றார்.

கடந்து வந்த பாதை

பிபிசி
1991 ஆண்டுவரை பெரும்பாலும் காங்கிரஸ் வசம் இருந்த இத்தொகுதி, பின்னர் திராவிடக் கட்சிகள் வசம் வந்தது. இத்தொகுதியில் காங்கிரஸ் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது.
கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா, 4,05,945 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுகவின் மொஹமத் ஜா, வெறும் 2,86,621 வாக்குகள் மட்டுமே பெற்றார்
இந்த முறை, ராமநாதபுரம் தொகுதியை தனது கூட்டணி கட்சியான பாஜகவிற்கு கொடுத்துள்ளது அதிமுக. பாஜகவின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் அங்கு போட்டியிடுகிறார். திமுகவும் இத்தொகுதியை தனது கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கட்சிக்கு அளித்துள்ளது. திமுக கூட்டணி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

தண்ணி இல்லாத காடு

வறட்சி மிகுந்த மாநிலமாக கருதப்படும் ராமநாதபுரத்தில், இன்றும் பலரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.
'தண்ணி இல்லாத காட்டுக்கு' மாற்றி விடுவேன் என்று இந்த மாவட்டத்தை குறித்து அதிகாரிகள் மிரட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அப்படிக் கூறப்படும் இம்மாவட்டத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
தண்ணீர் தட்டுப்பாட்டு இன்றும் இத்தொகுதியின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. இன்றும் அங்குள்ள பெண்கள், தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் செல்கிறார்கள் என்று ஊடக செய்திகளை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு பருவமழை சரியாக பொழியவில்லை என்பதினால், வரும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல தசாப்தங்களாக தலைப்புச் செய்திகளில் மீனவர்கள்

ராமநாதபுரம்படத்தின் காப்புரிமைINDIAPICTURES
மீன்வளம் மற்றும் மீன் உற்பத்தி அதிகமுள்ள கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரம் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஆனால், இங்குள்ள மீனவர்களின் பிரச்சனை பல தசாப்தங்களாக எந்த அரசாங்கத்தாலும் தீர்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
அவ்வப்போது இங்குள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொள்வதும், சிலர் சுட்டுக் கொல்லப்படுவதும், நூற்றுக் கணக்கானோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் என, ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது இம்மாவட்டம்.

கச்சத்தீவு விவகாரம்

இலங்கைக்கு தரப்பட்ட கச்சத்தீவினை இந்தியா திரும்பப் பெறவேண்டும் என்பதும், இப்பகுதியில் மீனவர்களுக்கு உள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைமீட்டுத் தர வேண்டும் என்பதும் இந்த தொகுதி மீனவர்களின் நீண்டகால கோரிக்கை. 1974 மற்றும் 1976 ஒப்பந்தத்தின் படி, இந்திய மீனவர்கள், அங்கு மீன்பிடிக்க முடியாது. வலைகளை காய வைக்கவும், இளைப்பாறவும், அந்தோனியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கவும் மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக பல தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், பின்னர் அவர்களது படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படாமல் அவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் மீனவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய அரசியல் கட்சி என்று எதை நம்புவார்கள், யாரை இந்த தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.




_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-47722897

No comments

Powered by Blogger.