வெயிலின் சூட்டை தணிக்கும் ஜிகர்தண்டா செய்யும் முறை இதோ
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்து அங்கு ஜிகர்தண்டா தான் பிரபலம். கோடை வெயிலினை சமாளிக்க அங்குள்ள மக்கள் இந்த ஜிகர்தண்டாவினை குடிப்பது வழக்கம். இப்பொது இந்த ஜிகர்தண்டா அணைத்து ஊர்களிலும் கிடைக்கிறது. இதனை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜிகர்தண்டா செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
சக்கரை – 3 ஸ்பூன்
பாதாம் பிசின் – 5 துண்டு
நன்னாரி சர்பத் – 3 டேபிள் ஸ்பூன்
ஜிகர்தண்டா செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனை நன்றாக காய்ச்சிக்கொள்ளவும். அதாவது 1 லிட்டர் பாலை 1/2 ஆகும் வரை நன்றாக காய்ச்சி கொள்ளவும். அவ்வப்போது பாலினை கிண்டிக்கொண்டே இருக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு தண்ணீர் ஊற்றாமல் கிளறவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சக்கரை காபி நிறத்தில் மாறும் . இவ்வாறு மாறும் சக்கரையினை தான் கேரமல் என்பார்கள். இப்படி தயாரிக்கப்படும் கேரமலினை எடுத்து ஆற வைக்கவும். பிறகு கேரமலை கொதிக்கும் பாலில் சேர்த்து கலந்து அதனை அடுப்பில் இருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனை பிரிட்ஜ்ல் வைத்து குளிரவைத்து எடுக்கவும்.
பிறகு ஒரு கிளாசில் ஊறவைத்த பாதம் பிசினை சிறிதளவு சேர்த்து அதன்மேல் நன்னாரி சர்பத் சிறிதளவு சேர்க்கவும். பிறகு கேரமல் சேர்த்து குளிரவைக்கப்பட்ட பாலினை ஊற்றி கலந்து அதன் மீது ஐஸ்கிரீம் வைத்து பரிமாறினால் ஒரிஜினல் மதுரை ஜிகர்தண்டா தயார்.
சமைக்க ஆகும் நேரம் – 1 மணி நேரம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://dheivegam.com/jigarthanda-recipe-tamil/
Post a Comment