Header Ads

Ads Bar

அரக்கோணம் மக்களவைத் தொகுதி: உலகிலேயே மிகவும் மாசடைந்த பகுதிக்கு என்ன தேவை?

மக்களவைத் தேர்தல் 2019படத்தின் காப்புரிமைDOMINIQUE FAGET
Image caption(கோப்புப்படம்)
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ராணுவ கோட்டையாக திகழ்ந்து, தற்போது உலகளாவிய சுற்றுச்சூழல் மதிப்பீடுகளில் மோசமான இடத்தை பெற்றுள்ள ராணிப்பேட்டை, திருத்தனி, சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதே அரக்கோணம் மக்களவைத் தொகுதி.
2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்
2019 இந்திய மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்த்தின் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏ. கே. மூர்த்தியும், திராவிட முன்னேற்ற கழகத்தின் எஸ். ஜெகத்ரட்சகனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை (அமமுக) சேர்ந்த பாத்திபன், மக்கள் நீதி மய்யத்தை (மநீம) ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாவேந்தன் ஆகியோர் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாவர்.
1977ஆம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது முதல் இதுவரை நடந்துள்ள பதினோரு தேர்தல்களில் அதிகபட்சம் காங்கிரஸ் கட்சி ஐந்துமுறை வெற்றிப்பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து, திமுக, அதிமுக ஆகியவை தலா இரண்டு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளன.
அரக்கோணம் மக்களவை தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த ஹரி இருக்கிறார்.
அரக்கோணம் மக்களவை தொகுதிபடத்தின் காப்புரிமைTWITTER
Image caption(கோப்புப்படம்)
13,75,655 வாக்களர்களை கொண்ட இந்த தொகுதியில் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக அக்கட்சியை சேர்ந்த ஜெகத்ரட்சகன், அதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக பாமகவை சேர்ந்த ஏ. கே. மூர்த்தி, அமமுகவை சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் திமுகவை சேர்ந்த ஜெகத்ரட்சகன் 1999 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் வெற்றிப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் மக்களவை தொகுதி

தொகுதியின் பிரச்சனைகள்

விவசாயம் செய்பவர்கள் பெரும்பான்மையினராக இருந்த இந்த தொகுதியில், பாலாற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் அடியோடு நின்றுவிட்டதையடுத்து வெகு சில இடங்களில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து சட்டத்திற்கு விரோதமாக வெளியேற்றப்படும் கழிவுகளால் அங்குள்ள நன்னீர் ஆதாரங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவதுடன், நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.
அத்துடன், அங்கிருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகள், வாயுக்களின் காரணமாக மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுவதாக சர்வதேச அளவிலான பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அரக்கோணம் மக்களவை தொகுதிபடத்தின் காப்புரிமைARUN SANKAR
Image caption(கோப்புப்படம்)
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிளாக்ஸ்மித் இன்ஸ்டியூட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகின் முதல் 10 மிகவும் மாசுபட்ட தொழில் நகரங்கள் பட்டியலில் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டையும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது பகுதியின் பாரம்பரிய தொழிலான விவசாயம் பொய்த்ததன் காரணமாக, இந்த தொகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் வேலைக்காக சென்னைக்கு வரும் அவலநிலை நீடித்து வருகிறது. அரக்கோணம் - சென்னை மார்க்கத்தில் இரயிலில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தாலே இதன் வீரியம் புரியும்.
சுத்தமான தண்ணீர், காற்று, மாசில்லா சுற்றுப்புறம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்ந்து வருவதாக இந்த தொகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்._____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-47905540

No comments

Powered by Blogger.