Header Ads

Ads Bar

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்



சனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடுகளின் ஒன்று யேமன். சன்னி பிரிவை சேர்ந்த அதிபர் மன்சூர் ைஹதிக்கு எதிராக ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படையினர் போராடி வருகின்றனர். 2015 ல் இருந்து நடைபெற்று வரும் இந்த உள்நாட்டு போர் கடந்த சில மாதங்களாக உச்சகட்டத்தை அடைந்துள்ளது.அரசுக்கு ஆதரவாக செயல்படும் சவுதி அரேபியா ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு சவுதியின் எண்ணெய் நிறுவனங்கள் விமான தளங்கள் வர்த்தக நிறுவனங்கள் என்று முக்கிய தளங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஏமன் எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் அப்ஹா என்ற நகரில் சவுதி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் மீது கடந்த வாரம் ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில் எல்லையில் உள்ள ஹவுதி போராளிகளின் முகாம்களின் மீது சவுதி விமானப்படை தாக்குதல் நடத்தியது.இந்நிலையில் மீண்டும் அப்ஹா விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை சவுதி அரசு உறுதி செய்யவில்லை.


_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.dinamalar.com/news_detail.asp?id=2300150

No comments

Powered by Blogger.