Header Ads

Ads Bar

அணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்


ஸ்டாக்ஹோம்,:ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.இந்த ஆண்டுக்கான கையேடு நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளது: சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டுள்ள நாடுகளில் பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களின் அணு ஆயுத இருப்பை அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்தியா 2018 ல் இருந்து 130 -140 அணு ஆயுதங்களையே தொடர்கிறது. அதிகரிக்கவில்லை.கடந்த ஆண்டு 280 அணு ஆயுதங்களை வைத்திருந்த சீனா, இந்த ஆண்டு 290 ஆகவும், 140 -150 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் 160 ஆகவும்,80 லிருந்து இஸ்ரேல் 90 ஆகவும் தமது அணு ஆயுதங்களை உயர்த்தியுள்ளன. 2018 ல் 10 -20 அணுகுண்டுகளை வைத்திருந்த வடகொரியா தற்போது 30 அணுகுண்டுகளை வைத்துள்ளது.


2018 ல் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா என 9 நாடுகளின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 14,465. இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கையில் 600 குறைந்து, 3,750 அணு ஆயுதங்களாக உள்ளன. இவற்றில் 2 ஆயிரம் அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.dinamalar.com/news_detail.asp?id=2300098

No comments

Powered by Blogger.