Header Ads

Ads Bar

மெக்சிகோ கடத்தல் மன்னன்: அமெரிக்க போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சாப்போவுக்கு ஆயுள் சிறை

அமெரிக்க போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறைபடத்தின் காப்புரிமைEPA

கடத்தல் மன்னன்

அமெரிக்க போலீஸூக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மெக்சிகோவை சேர்ந்த கடத்தல் மன்னன் குவாக்கினோ சாப்போவுக்கு ஆயுள் மற்றும் முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். 2015ம் ஆண்டு மெக்சிகோ சிறையிலிருந்து தப்பிய இவர் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார்.
தன் மீதான விசாரணை முறையாக நடைபெறவில்லை என நீதிமன்றத்தில் இவர் வாதிட்டார்.
அமெரிக்க போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதை மருந்து சாம்ராஜியமே இவர் நடத்தி வந்தார். 2009ம் ஆண்டு உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் 701ம் இடத்தில் இருந்தார். இவருடைய அப்போதைய சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர்கள்.


_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/global-49026875

No comments

Powered by Blogger.