Header Ads

Ads Bar

நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்துமா?

சரியான உணவு தங்களை நல்ல உறவாளராக ஆக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசரியான உணவு தங்களை நல்ல உறவாளராக ஆக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்
பாலுணர்வை, செயல் ஆற்றலை அல்லது பாலுறவு மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஓர் உணவு உள்ளது என்பதற்கான ஆதாரம் இருந்தால், அது நல்ல விற்பனையாகும்.
சமச்சீரான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் நல்ல மன ஆரோக்கியம் ஆகிய அனைத்துமே உங்களுடைய பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்தும். ஆனால் இயற்கையாக பாலுணர்வைத் தூண்டக் கூடிய தனிப்பட்ட உணவுகள் ஏதும் இருக்கின்றனவா?
என்டார்பின் சுரப்பிகளை தூண்டுதல், மகிழ்ச்சிக்கு உந்துதலை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யும் சத்துகள் உள்ள உணவுகள் ஆரோக்கியமான பாலுறவு வாழ்க்கையுடன் தொடர்புடையவையாக இருப்பவை அல்லது சொத்து மற்றும் வெற்றியுடன் தொடர்புள்ளவையாக இருப்பவை ஆகியவை பாலுணர்வை அதிகரிக்கக் கூடியவை என்று சொல்லப் படுகின்றன.
இதன் பின்னணியில் உள்ள வரலாறு மற்றும் அறிவியலை நாம் பார்ப்போம். இதில் ஏதாவது உணவுகள் உங்களுடைய பாலுறவு வாழ்க்கையை உண்மையில் மேம்படுத்துமா என்று பார்ப்போம்.

உணவு வகை சிப்பி சாப்பிடுவது பயன் தருமா?

சிப்பி உணவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஉணவு வகை சிப்பிகள் பாலுணர்வைத் தூண்டக் கூடியவை என்பது, பாலுறவுக் காதலுக்கான கிரேக்க பெண் கடவுள் அப்ரோடைட் பெயரில் கடலோர மக்களால் உருவாக்கப்பட்ட எண்ணமாக இருக்கலாம்.
வரலாற்றில் பாலுறவில் நாட்டம் கொண்டவராக கூறப்படும் கேசனோவா, காலை உணவாக 50 கடல் சிப்பிகளைச் சாப்பிட்டார் என்று சொல்வார்கள். இருந்தபோதிலும் கடல் சிப்பிகளுக்கும், பாலுறவு செயல்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே இந்தப் புரளி எங்கிருந்து உருவாகியிருக்கும்?
பாலுறவுக்கான கிரேக்கப் பெண் கடவுள் அப்ரோடைட் - வெள்ளை நுரைப்பஞ்சில் பிறந்து கடலில் இருந்து மேலே வந்தவராகக் கருதப்படுகிறார். எனவே கடல் உணவுகள் பாலுணர்வை அதிகரிக்கச் செய்யும் என்று கருதப்படுகிறது.
ஆனால் கடல் சிப்பிகள் சாப்பிடுவோருக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது; அரிதாகக் கிடைக்கும் இந்த மெல்லுடலிகளில் அதிக அளவில் துத்தநாகம் இருக்கிறது. அது விந்து நீர் உற்பத்திக்கு அவசியமான சத்தாக இருக்கிறது.
ஆண் மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை அளித்து, விந்தணு தரத்தை உயர்த்துவதற்கு துத்தநாகம் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஷெல்பிஷ் எனப்படும் ஓட்டுடலிகள், சிவப்பு மாமிசம், பூசணி, சணல் மற்றும் எள் போன்ற விதைகள், முந்திரி, பாதம் போன்ற கொட்டை வகைகள், கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ் போன்ற அவரை வகைகள், பால் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றில் அதிக அளவு துத்தநாகம் கிடைக்கிறது.

டார்க் சாக்லெட் உங்களை நல்ல உறவாளராக ஆக்குமா?

டார்க் சாக்லெட் சாப்பிடும் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionடார்க் சாக்லெட் சாப்பிடுவது உறவில் ஈடுபடும் எண்ணத்தை அதிகமாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
டார்க் சாக்லெட் சாப்பிடுவது உறவில் ஈடுபடும் எண்ணத்தை அதிகமாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனென்றால் `உறவுக்கான ரசாயனமாக' கருதப்படும் பினைல் எத்திலமைன் (PEA) அதில் இருக்கிறது.
உறவின் முதல் சில மாதங்களில் உருவாகும் PEA - நன்மையாக உணரச் செய்யும் டோப்பமைன் சுரப்பை தொடங்கி வைக்கிறது. மூளையில் அனுபவித்து அறியும் இன்பத்துக்கான மையத்தை அது தூண்டிவிடுகிறது.
சாக்லெட்டில் இது மிகவும் சிறிதளவுக்கு தான் இருக்கிறது. மேலும், சாப்பிட்ட பிறகும் அது செயல்படுமா என்பது குறித்த சந்தேகம் இருக்கிறது.
கோகோவாவிலும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தையும், `மகிழ்ச்சி ஹார்மோன்' எனப்படும் செரோட்டோனின் சுரப்பையும் அதிகப்படுத்தும் என்று சொல்லப் படுகிறது.
ஆகவே, சாக்லெட்டுக்கும் பாலுறவுக்குமான தொடர்பு எப்போது தொடங்கியது? அநேகமாக 16வது நூற்றாண்டாக இருக்கலாம்.
ஹெர்னன் கார்ட்டெஸ் என்பவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டவர், சாகசப் பயணங்கள் மேற்கொள்பவர். மாயா மற்றும் அஜ்டெக் ராஜ்ஜியங்களில் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்போது மெக்சிகோ எனப்படும் அன்றைய பகுதி கேஸ்டிலே சாம்ராஜ்யத்துக்கு உள்பட்டதாக இருந்தது. அந்தப் பகுதிகளிலும் இவர் பயணம் செய்திருக்கிறார்.
சாக்லெட்டுக்கு முதலில் அறிமுகமான ஐரோப்பியர் இவராகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. கோகோவாவில் இருந்து உருவாக்கிய வடிநீரை மாயா அருந்துகிறார் என்றும், அதனால் ``எதிர்ப்பாற்றல் பெருகி, அயற்சியைத் தடுக்கிறது'' என்றும் தனது மன்னருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் கேஸ்ட்டைல் நாட்டைச் சேர்ந்த அந்தக் காலத்து மக்கள், மாயா அறிந்திராக மருத்துவ குணங்கள் சாக்லெட்டில் இருப்பதை அறிந்திருக்கலாம். பாலுணர்வை தூண்டக் கூடிய பொருளாக இது பயன்படும் என்பதற்கான ஆதாரம் எதுவும் நிச்சயமாக இல்லை.
டிரிப்டோபான் கிடைக்கும் மற்ற உணவுகள்: மீன்கள், முட்டை, கோழி, பசலைக்கீரை, விதைகள், கொட்டை வகைகள் மற்றும் சோயா பொருட்கள்.

மிளகாய்கள் உங்களை நல்ல உறவாளராக ஆக்குமா?

மிளகாய்கள் செரிமாணத்தையும் இருதய துடிப்பையும் வேகப்படுத்தும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமிளகாய்கள் செரிமாணத்தையும் இருதய துடிப்பையும் வேகப்படுத்தும்
காரமான மிளகாய்களில் கேப்சாய்சின் என்ற பொருள் இருக்கிறது. என்டார்பின் சுரப்பை அது ஊக்குவிக்கிறது. (ஆமாம், நல்ல உணர்வை உருவாக்கும் மற்றொரு ஹார்மோன்). அதிக உத்வேக உணர்வை இது தரும்.
அது உங்களுடைய செரிமாணத்தையும் விரைவுபடுத்தும். உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து, இதயத் துடிப்பையும் அதிகப்படுத்தும். பாலுறவு கொள்ளும் போது இவையெல்லாம் ஏற்படும்.
இருந்தாலும், மிளகாய் உணவு தயாரிக்கும்போது, கைகளைக் கழுவ மறந்துவிடாதீர்கள்!

மது உதவி செய்யுமா அல்லது மந்தமாக்குமா?

மது குவளைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமது உங்களுடைய வெட்கத்தைக் குறைக்கும். ஆனால் அதிகம் பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்
தயக்கங்களைக் குறைத்து உங்களுடைய ஆசையை மது அதிகரிக்கும். ஆனால் மேக்பெத் கூறுவதைப் போல, மது அருந்தியிருக்கும்போது அது ``ஆசையை அதிகப்படுத்தும், ஆனால் செயல்பாட்டைக் குறைத்துவிடும்.''
அதிகமான மது அருந்துவது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலாரிடமும் உணர்திறன் குறைந்துவிடும். காலப்போக்கில் அது பாலுறவு விருப்பத்தைக் குறைக்கும். பிரச்சினை தீவிரமானால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்.
மேலும் மது அருந்தும் இடத்தைப் போல வாடை இருப்பது, உணர்வைத் தூண்டுவதற்கு ஏற்றதல்ல!

விரைப்புத்தன்மை குறைந்துபோகும் ஆபத்தை எப்படிக் குறைப்பது?

தாவரங்களால் சக்தியூட்டப்பட்ட பழங்களுடன் இணைந்திருங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionதாவரங்களால் சக்தியூட்டப்பட்ட பழங்களுடன் இணைந்திருங்கள்
தாவரங்களில் இருந்து பிரிக்கப்படும் பிளவனாய்ட் எனப்படும் பொருள் மிகுந்த உணவுகளை சாப்பிடுவது விரைப்புத்தன்மை குறைபாடு ஆபத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, நீலபெர்ரி பழங்கள் மற்றும் எலுமிச்சை வகை பழங்களில் காணப்படும் அந்தோசியனின் எனப்படும் பிளவனாய்ட், விரைப்புத் தன்மை குறைபாட்டை தடுக்கக் கூடியவையாக உள்ளன என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
அதிக அளவு பழங்கள் சாப்பிடுவது, விரைப்புத் தன்மை குறைபாட்டை 14 சதவீதம் அளவுக்கு தடுக்கக்கூடும். பிளவனாய்ட் மிகுந்த உணவுகளை சாப்பிடுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வதால் இந்த ஆபத்தை 21 சதவீதம் வரை குறைக்க முடியும்.
எனவே பழங்களுடன் இணைந்திருங்கள்!
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ளதைப் போன்ற உணவுப் பழக்கம் விரைப்புத் தன்மை குறைபாட்டை சிறப்பாகத் தடுக்கும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவர்களுடைய உணவு பழக்கம் முழு தானியங்கள், பழம், காய்கறிகள், அவரை வகைகள், கொட்டை வகைகள் (பாதாம், வால்நட் போன்றவை) மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் பாலுறவு செயல்பாட்டுத் திறனை அது தக்க வைக்கிறது.
அந்தோசியானின் இருக்கும் மற்ற உணவு வகைகள் : செர்ரிகள், ப்ளூபெர்ரிகள், நாவல்பழம், கிரான்பெர்ரிகள், ராஸ்பெர்ரிகள், சில வகை திராட்சைகள், ஆபர்ஜின்கள் மற்றும் சிவப்பு முட்டைகோஸ்.

பாலுணர்வு என்பதன் மேலோட்டப் பார்வை

பாலுணர்வைத் தூண்டும் உணவுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உணர்வைத் தூண்டுபவை, செயல்பாட்டை ஊக்குவிப்பவை, பாலுறவு ஆனந்தத்தை அதிகரிப்பவை என பிரிக்கலாம்.
இதன் வெற்றியை அளவிடுவது கஷ்டம் என்பதால், மனிதர்களில் இந்த உணவுகள் எந்த அளவுக்குப் பலன் தருகின்றன என்பதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் கிடையாது.
உண்மையில், பழுத்த அழுகிய பழத்தின் சென்ட் பாலுணர்வைத் தூண்டுகிறது என்பது தான் நிரூபிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது. அது பழங்களில் மொய்க்கும் ஆண் பூச்சிகளுக்கு தான் வேலை செய்கிறது.
பாலுணர்வைத் தூண்டும் உணவு வகைகள், நன்றாக பலன் தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் அவற்றை சாப்பிடுகிறார்கள். ஏதாவது ஒன்று உங்களுக்குப் பலன் தருகிறது என்றால், ஏன் பலன் தருகிறது என்பது முக்கியமா என்று பாலுறவு ஆரோக்கிய நிபுணர் டாக்டர் கிரிச்மேன் கூறுகிறார்.
பாலுணர்வைத் தூண்டுவதாகச் சொல்லப்படும் பல உணவுகள் ஆரோக்கியமானவை. ஆனால் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்டவையா என்பதையும், பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இல்லை என்பதையும், அற்புதமான பலன்களைத் தரும் என்று சொல்லாதவையாகவும் இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மறைந்திருக்கும் காரணங்கள்

பாலுணர்வு எண்ணம் உங்களுக்குக் குறைவாக இருக்கிறது என்றால், மருத்துவ காரணங்கள் இருக்கலாம். எனவே எப்போதும் உங்கள் டாக்டரை அணுகுங்கள்


_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/global-48951753

No comments

Powered by Blogger.