யாழ் கடலில் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பவளப் பாறைகள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் இதுவரை கண்டறிராத புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சுழியோடிகளினால் இந்த புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிடுகிறது.

கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியல் அட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் இதுவரை கண்டிராத பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பவளப்பாறைகள் கடற்பரப்பில் சுமார் 400 மீட்டர் நீளம் பரவி மிகவும் அழகாக காட்சியளிக்கின்றது என கடற்படை தெரிவிக்கிறது.
பவளப் பாறைகள் கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவதில் இன்றியமையாத பகுதி என குறிப்பிடப்படுகிறது.
இந்த பவளப் பாறைகள் இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளினால் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், இந்த புதுவகைப் பவளப் பாறைகளை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/sri-lanka-48896050
Post a Comment