Header Ads

Ads Bar

பன்வாரிலால் புரோஹித் - “உயர்கல்வியில் சீனாவைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது”

"உயர்கல்வியில் சீனாவைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது" :தமிழக ஆளுநர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசித்தரிப்புப் படம்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "உயர்கல்வியில் சீனாவைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது"

உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கையில் சீனாவைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) ஆகிய அமைப்புகளின் சார்பில் 'தரமான மற்றும் நிலைத்த கல்வி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப் படம்
இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் உள்ளன. அதில் 80 சதவீதம் அரசுப் பள்ளிகளாகவும், 37 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. தேசிய அளவில் அரசுப் பள்ளிகள் தான் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. நம்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்கள் சராசரி 28.5 சதவீதமாக உள்ளது. அதை விட கூடுதலாக தமிழகத்தில் 46 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை சீனாவில்கூட 39 சதவீதமே உள்ளது." என்றார்.


_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-49041327

No comments

Powered by Blogger.