Header Ads

Ads Bar

பாஸ்போர்ட் மோசடி: கைரேகையை அழித்து போலி பாஸ்போர்ட் - பின்னணியில் இருப்பது யார்?

விரல்களில் அறுவை சிகிச்சை
ஏதாவது ஒரு சட்ட வழக்கில் சிக்கி, அதனால் வெளிநாட்டுக்கு செல்ல தகுதியிழந்தவர், இந்த தடையை அகற்றி வெளிநாட்டுக்கு செல்ல முடியுமா? குடியேற்ற விதிமுறைகளின்படி, அவ்வாறு செல்ல முடியாது.
ஆனால், போலி பாஸ்போர்ட் என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. இருப்பினும், ஒரு நபர் பல பாஸ்போர்ட்களை வைத்திருப்பதும், பல கைரேகை தகவல்களை வைத்திருப்பதும் காவல்துறையினருக்கே புதிய விஷயமாக தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் வழங்கிய தகவல்படி, சுமார் 50 பேர் இம்மாதிரியான போலி பாஸ்போர்ட்டுகளை வைத்துகொண்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். ஆனால், இதுதொடர்பான தகவல்களை விசாரணையின் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். இந்த நபர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய நபர்கள் புரிந்துள்ள குற்றங்களின் தீவிரம் குறித்து எந்த தெளிவு இல்லை.
மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பலகோலை சேர்ந்த நெல்சன் பணி காரணமாக வளைகுடா நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். ஆனால், விதிகளின்படி அவருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான தகுதிகள் இல்லை.
எனவே, நெல்சனின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி பணபறிக்க சில கும்பல்கள் அவரை தொடர்பு கொண்டன. அவர்களின் திட்டம் குறித்து நெல்சனிடம் விவரித்தனர்.
நெல்சன் இந்த சந்தேகத்திற்குரிய கும்பல் குறித்து பால்கோல் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்த பிறகே இதுகுறித்து தெரியவந்தது என்கிறார் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாள, நவ்ஜீத் சிங்.
மேற்கு கோதாவரி மாவட்டதின் காவல் கண்காணிப்பாளர், நவ்ஜீத் சிங் க்ரேவால்
Image captionமேற்கு கோதாவரி மாவட்டதின் காவல் கண்காணிப்பாளர், நவ்ஜீத் சிங் க்ரேவால்
தற்போது பாஸ்போர்ட் பெற்றுகொள்வதற்கு ஆதார் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
பயோமெட்ரிக் முறையை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஆதார் ஆவணத்தை போலியாக தயார் செய்து பாஸ்போர்ட் வாங்குவது எளிய முறையாக மாறியுள்ளது.
இதில் ஈடுபடும் கும்பல் நல்ல பயிற்சி எடுத்துகொண்டு கைரேகைகளை மாற்றும் மோசடியில் இறங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி காவல்துறை கண்காணிப்பாளர் நவ்ஜீத் சிங் க்ரேவால் பிபிசியிடம் தெரிவித்தபோது, "குறைந்தது 10-15% வரையிலான கைரேகையை மாற்ற இவர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மூலம் பழைய கைரேகைகளை மாற்றிவிடுகின்றனர். பின்னர் தையல் போடுகின்றனர்" கூறினார்.
"இது மிக எளிய முறை. இதை அவர்கள் ஒரு சிறிய அறையிலோ அல்லது விடுதியிலுள்ள ஓர் அறையிலோ முடித்துவிடுகின்றனர். இதனால் எல்லோரின் மீதும் சந்தேகம் வருமளவுக்கு இந்த கடமையை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். இதில் பழைய தரவுகளை வைத்து சரிபார்க்கவும் முடிவதில்லை. புதிய கைரேகையை கொண்டு புதிய ஆதார் எண்களையும், பிற ஆவணங்களையும் இந்த மோசடி மேற்கொள்வோர் எளிதாக பெற்றுவிடுகின்றனர். இந்த புதிய ஆவணங்களை கொண்டு அவர்கள் புதிய பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கின்றனர். காவல்துறையினர் சரிபார்ப்பதை தவிர்ப்பதற்காக புதிய முகவரியை கொடுத்துவிடுகின்றனர்" என்று அவர் கூறினார்.
"இத்தகைய மோசடி மூலம் சிலரை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதை நாங்கள் அறிய வந்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது" என்கிறார் அவர்.
கைரேகை மாற்றம்

காரணகர்த்தாவாக இருக்கும் இலங்கையை சேர்ந்த பேருந்து நடத்துனர்

ஆந்திரபிரதேசத்தில் நடைபெறுவதாக தெரிய வந்துள்ள பாஸ்போர்ட் பெற கைரேகையை மாற்றிவிடும் மோசடிக்கு இலங்கையை சோந்த ஜாஹீர் ஹூசேன் காரணகர்த்தாவாக செயல்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கையின் கண்டி நகரில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்யும் ஜாகிர் ஹூசேன், ஆடை வணிகம் என்ற பெயரில் இந்தியா வருவதுண்டு. நல்லூர் மாவட்டத்தில் ரமேஷ் ரெட்டி மற்றும் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த போக்கா ராம்பாபுவுடன் அவர் நட்பாக பழகியுள்ளார்.
இவ்வாறு கைரேகையை அழித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொடுக்கும் மோசடியில் இந்த மூன்று பேரும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
குவைத்தில் சட்டவிரோதமாக மது விற்றதில் பிடிபட்ட போக்கா ராம்பாபுவின் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டது. காவல்துறையினரின் பதிவேடுகளில் இது பதிவாகியுள்ளது. ஆனால், பின்னர் அவர் போக்கா ராஜேஷ் என்று தனது பெயரை மாற்றி புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
ஒரே புகைப்படத்துடன் இரண்டு பாஸ்போர்ட்களை இவர் வைத்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் இருப்பவர் யார்?

கைரேகை மாற்றம்
குவைத்தில் வேலை செய்தபோது போக்கா ராம்பாபு ஜாகிர் ஹூசைனின் தந்தையோடு நட்பாக பழகியுள்ளார். மேரி என்கிற பெண்ணும் இவர்களுடன் சேர்ந்துள்ளார். இந்த மூவரும் இணைந்து கைரேகையை மாற்றி புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொடுக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 40 பேரை வெளிநாட்டுக்கு இவர்கள் அனுப்பியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி;
  • ஜாகிர் ஹூசேனின் தந்தையும், மேரியும் குவைத்திலுள்ள விவகாரங்களை கவனித்து கொண்டனர்.
  • நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த பயண முகவரான ரமேஷ் ரெட்டி பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
  • கைரேகைகளை மாற்றுகின்ற ஏற்பாடுகளை ஜாகிர் ஹூசேன் கவனித்துள்ளார்.
  • போக்கா ராம்பாபு உள்ளூர் பகுதியில் இருந்து மக்களை தேடி கண்டு பிடித்து, இவர்களிடம் சேர்க்கும் வேலையை செய்துள்ளார்.
இவர்களோடு, கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பயண முகவர்கள் சிலரும் இணைந்து இந்த மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார்.
தேடப்படும் சில சந்தேக நபர்களுக்கு அப்பாற்பட்டு, சில காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த மோசடியில் பங்கிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரண மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் மோசடி

கைரேகை மாற்றம்
கைரேகையை அழித்து புதிய பாஸ்போட் எடுத்துக்கொள்ளும் இந்த மோசடி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவதாக நவ்ஜீத் சிங் க்ரேவால் தெரிவித்தார்.
வளைகுடாவில் தங்கியிருந்தபோது, வங்கதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்த சிலர் இந்த மோசடி செய்வதை போக்கா ராம்பிரபு பார்த்துள்ளார்.
ஆனால், தனிநபராக இதனை செய்ய முடியாமல், ஜாகிர் ஹூசேன் மற்றும் ரமேஷ் ரெட்டியின் துணையோடு அவர் இந்த மோசடியை தொடங்கியுள்ளார்.
சென்னையிலும், மும்பையிலும் இந்த மோசடியை செய்துள்ளனர். ஜாகிர் ஹூசேனின் கீழ் போக்கா ராம்பிரபு பயிற்சி பெற்றதோடு, அவரது வீட்டில்வைத்து ஐந்து பேரின் கைரேகைகளை மாற்றியுள்ளார்.
பால்கோல் மண்டலத்தில் பாகேஸ்வரத்தைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர் வீர திரிமூர்துலு என்பவர், கைரேகைகளை மாற்றுவதில் பயிற்சி பெற்று இந்த மோசடியில் சேர்ந்து செயல்பட்டுள்ளார். இந்த மோசடியில் வேறு யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என இன்னும் உறுதி செய்ய வேண்டியுள்ளது என்று இந்த காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கைரேகை மாற்றம்
போலி பாஸ்போர்ட்களை பெறுவதில் இந்த கும்பல் ஈடுபட்டதுபோல பல நாடுகளின் போலி விசாக்களையும் உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு எந்த சான்றுகளும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் அதிக உண்மைகள் வெளிவரலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.