பெண்களுடன் இணையதளத்தில் 'டேட்டிங்' செய்ய விரும்பியவரிடம் 18 லட்சம் ரூபாய் மோசடி

கொல்கத்தாவில் இணையதளம் மூலம் டேட்டிங் செய்து பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய கால் சென்டர் மையத்தை சேர்ந்த 23 பெண் ஊழியர்களும் , அலுவலக பணியில் இருந்த வேறு மூவரும் விசாகப்பட்டினம் சைபர் கிரைம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை. விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலிருந்து இயங்கிய ஆன்லைன் டேட்டிங் நிறுவனம் செய்த மோசடியில் பாதிக்கப்பட்ட அவர் 18 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நடத்தும் குழுக்கள் இணையதளம் மூலம் டேட்டிங் என்ற பெயரில் வலைத்தளத்தை உருவாக்கி பல பெண்களின் போலி சுயவிவரங்களையும் படங்களையும் பதிவேற்றும் செய்து, முழு மோசடியையும் இணையம் மூலமாகவே செயல்படுத்துவதாக பிபிசியிடம் பேசிய விசாகப்பட்டினம் சைபர் கிரைம் ஆய்வாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இந்த வலைத்தளத்தில் பதிவுசெய்த பயனாளர்கள் தங்கள் அலுவலகங்கள் நாட்டின் எந்த பகுதிகளில் செயல்படுகிறதோ அந்த பகுதிகளிலெல்லாம் டேட்டிங் செய்யலாம் என வலைத்தளம் கூறுகிறது. இதற்கான பதிவு கட்டணம் 1000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனாளர்கள் தங்கள் விவரங்களை வலைத்தளத்துடன் பதிவுசெய்தவுடன், அந்நிறுவனத்திடமிருந்து ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பெண்ணுடன் பேசுவதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படும்.
பயனர்கள் செலுத்தும் தொகையைப் பொறுத்து வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் கார்டுகள் போன்ற பல்வேறு சலுகைகளுடன் இந்த வலைத்தளம் பயன்பாட்டாளர்களை ஈர்க்கிறது. இந்த பயனாளர் கார்டுகளுக்கான கட்டணம் 2 லட்சம் முதல் பத்து லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
பெண்களுடன் டேட்டிங் , வெளியே செலுத்தல் , திரைப்படம் மற்றும் பயணங்களுக்கு செலுத்தல் போன்ற சேவைகளை அந்த கார்டு வைத்து இருக்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் பிளாட்டினம் கார்டு வைத்திருப்பவர்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கட்டணம் செலுத்திய பிறகு, பயன்பாட்டாளருக்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வரும். அந்த பெண் தொடர்ந்து பயன்பாட்டாளருடன் உரையாடலில் ஈடுபடுகிறார், பின்னர் பயன்பாட்டாளருக்கு அழைப்பு வருவது நிறுத்தப்படுகிறது.

அந்த பயனாளர் திரும்ப அந்த பெண்ணிற்கு அழைப்புவிடுக்கும்போது, அந்த பெண் தனியுரிமை கட்டணங்களை அந்நிறுவனத்திடம் இருந்து பெறவில்லை என்ற பதில் அனுப்பப்படுகிறது. எனவே அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேச ஒரு லட்சம் ரூபாயை தனியுரிமை கட்டணமாக அந்த பயன்பாட்டாளர் செலுத்த வேண்டும்.
- அணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது?
- இந்திய அரசு உங்கள் வாட்ஸ்ஆப் செய்தியை கண்காணிக்க விரும்புவது ஏன்?
இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அனைத்து சுயவிவரங்களும் போலியானவை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் தேர்ந்தெடுத்த பெண்ணை பலமுறை தொலைபேசியில் அழைத்தபோதும் தொடர்புகொள்ள முடியாதபோதும் சந்திக்க முடியாதபோது தான் ஏமாற்றப்பட்டதை பயன்பாட்டாளர் உணர்வார்.
வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தை உணர்ந்து தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டால், மேலும் 5 லட்சம் ரூபாய் கூடுதல் வைப்புத்தொகையை கேட்கிறார்கள். அந்த தொகையில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையைத் திருப்பித் தருவதாககவும் அந்நிறுவனம் கூறுகிறது.

ஆனால் வாடிக்கையாளர்கள் யாரும் எந்தவொரு தொகையையும் பெறுவதில்லை, சில நாட்களுக்கு பிறகு அந்நிறுவனம் வழங்கிய தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்படுகின்றன.
இந்த ஆன்லைன் மோட்டியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பலர் புகார் அளிக்க அஞ்சுகின்றனர். இந்த வழக்குகளின் தன்மை காரணமாகவும், தாங்கள் கேலிக்கு ஆளாவதை தவிர்க்கவும் காவல்துறையில் புகார் அளிப்பதில்லை. இதுவே இவ்வாறான ஆன்லைன் மோசடி வலைத்தளங்கள் வளர்ச்சி அடைய காரணமாக அமைகிறது.
காவல்துறையினர் விசாரணை
வாட்ஸ் அப் தரவுகள் , தொலைபேசி அழைப்புகள், வலைத்தள பதிவுகள் வைத்து , இந்நிறுவனம் செயல்படும் இடத்தை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில் இந்நிறுவனம் கொல்கத்தாவில் மென்பொருள் நிறுவனம் என்ற தோற்றத்துடன் செயல்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டாலும் , இந்நிறுவனத்தை உருவாக்கிய முக்கிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதுபோன்ற வலைத்தளங்கள் நாடு முழுவதும் இயங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது?
- நிலவின் வளிமண்டலத்தில் புதிய வாயுவைக் கண்டறிந்த சந்திரயான்-2ன் கருவி
கைது செய்யப்பட்ட பெண் கூறுவது என்ன?
25, வயதான நிவேதிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்று இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் அவரது நண்பர் மூலம் மாதம் 20,000 ரூபாய் சம்பளத்திற்கு ஒரு வேலை உள்ளது என தகவல் கிடைத்தவுடன் மகிழ்ச்சி அடைந்தார்.
கொல்கத்தாவின் நகரமான அலிப்பூரில் அந்த வேலை என்று அவர் நண்பர் கூறியுள்ளார். எனவே அந்த நண்பரோடு சென்று அந்த பணியில் சேர்ந்துள்ளார்.

அந்த வேலையின் தன்மையை புரிந்துகொண்டவுடன் ஒரு மோசமான இடத்தில் வந்து சிக்கிக்கொண்டதை புரிந்துகொண்டார்.
அவரின் குடும்ப உறுப்பினர்களிடமும் இந்த வேலையை பற்றி அவர் எதுவும் தெரியப்படுத்தவில்லை.
இறுதியாக, தீபாவளிக்கு முன்பு, விசாகப்பட்டினம் போலீசார் கொல்கத்தாவின் சைபர் கிரைம் துறையின் அதிகாரிகளுடன் குழுவாக வந்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அதன் பிறகுதான், தன் வேலை குறித்து அவர் குடும்பத்திற்கு தெரியவந்தாக கூறுகிறார்.
- நோபல் பரிசு பெற்றவர்கள் பயணத்தை தொடங்கிய ராஜஸ்தான் கிராம பள்ளிகள்
- நிலவின் வளிமண்டலத்தில் புதிய வாயுவைக் கண்டறிந்த சந்திரயான்-2ன் கருவி
நிவேதிதாவும் அவருடன் பணிபுரிந்த மற்ற இளம் பெண்களும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இளைஞர்களை டேட்டிங் கவர்ச்சியுடன் ஏமாற்றிவந்தனர் .
இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வேலை என்பதை அறிந்த போதிலும், வேலை வாய்ப்புக்காகவே இதைச் செய்தாக கூறுகின்றனர்.
கல்லூரி மாணவர்களைத் தவிர, பெங்காலி படங்களின் மாடல்களையும் நடிகைகளையும் டேட்டிங் செய்யலாம் என்று ஆண்களை நம்பவைத்துள்ளனர்.

"இந்த நெட்வொர்க் நாடு முழுவதும் பரவியுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான மக்களிடம், கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவர்களிடம் விசாரித்து வருகிறோம்," என்று கொல்கத்தா காவத்துறை தலைமையகத்தில் உள்ள அதிகாரி, லால்பஜார் கூறுகிறார்.
ஊழியர்களை பணியில் அமர்த்தியது எப்படி ?
செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டு , ஓக்கேலம் ஐ டி சர்விஸ் லிமிடெட் என்ற பெயரில் ஊழியர்களை பணியில் அமர்த்துகிறார்கள். உள்ளூர் செய்தித்தாளில் தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சலுடன் விளம்பரம் செய்யப்படும். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ .15000 சம்பளம் வழங்கப்படும், அலுவலக ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு பயிற்சி அளிப்பார்கள் என்றும் குறிப்பிடப்படும்.
நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை குறித்து சுருக்கமாகக் கூறுகிறார்கள். தொலைபேசியில் வாடிக்கையாளரிடம் பேசுபவர்களுக்கு சராசரியாக 50000 - 70000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
கொல்கத்தா காவல்துறையின் சைபர் கிரைம் துறை அளித்த தகவலின்படி, இதுபோன்ற போலி வலைத்தளங்களின் செயல்பாட்டிற்கான முக்கிய மையமாக கொல்கத்தா உருவெடுத்துள்ளது. இதே போல 2018ல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்களை பல கோடி ஏமாற்றியதற்காக குறைந்தது மூன்று கால் சென்டர்களில் பணிபுரியும் 18 பேரை கடந்த மாதம் கைது செய்துள்ளனர்.
சைபர் கிரைம் வழக்குகள் தொடர்பாக ஆந்திராவில் மட்டும் 2016ல், 616 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2017ல் 51 சதவிகிதம் அதிகரித்து , 931 வழக்குகளாக ஆக உயர்ந்துள்ளது என சைபர் கிரைம் போலீசார் வழங்கிய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பலவீனங்களால் நடந்த ஏமாற்றம்?
மக்களின் நலன்களையும் பலவீனங்களையும் வைத்து அவர்களை ஏமாற்றுவது எளிதானது, மேலும் பாலியல் ஆசைகளுடன் தொடர்புடையது என்றால் மிகவும் எளிதாக ஏமாறுவார்கள் என்று உளவியலாளர் கரி ராமரெடி கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், நாம் செக்ஸ் பற்றி பேசவதில்லை. பாலியல் என்பது தெய்வீகமானது என்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இந்த சமூகத்தில் இதைப் பற்றி பேசக்கூட விரும்பவில்லை.

இருப்பினும், சிக்மன்ட் ஃபிராய்ட் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பாலியல் தொடர்பு இருக்கும். எதிர் பாலினத்தவரிடம் ஈர்க்கப்படுவது இயற்கையானது. இந்த சமூகத்தின் சூழல் காரணமாக பலர் அதை வெளியில் சொல்வதில்லை. எனவே வலைத்தளங்கள் தனிப்பட்டவை , ரகசியமாகவே இருக்கும் என நம்பி இதுபோன்ற மோசடிகளில் சிக்குகின்றனர்.
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாகவே இணையம் மாறிவிட்டது. இதுபோன்ற வலைத்தளங்களில் தெரியாதவர்களுடன் டேட்டிங் செய்யம்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கரி ராமரெடி கூறுகிறார்.
கைது செய்யப்பட்டவர்கள் கொல்கத்தா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர். அவர்களை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து மேலும் விசாரணை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment