Header Ads

Ads Bar

வாட்ஸ்ஆப் ஊடுருவல்: இஸ்ரேல் மென்பொருளைக் கொண்டு இந்தியர்களை வேவு பார்த்தது இந்திய அரசா, வெளிநாடா?

வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் வாட்ஸ்அப்பில் சட்டவிரோதமாக ஊடுருவி, ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை உளவு பார்த்ததாக பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன. ஆனால் முழு உண்மையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
உலகெங்கிலும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த தாக்குதல்கள் குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டவை என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓவின் விளக்கம் உண்மையாக இருந்தால், அரசோ அல்லது அரசு நிறுவனங்கள் மட்டுமே பெகாசஸ் மென்பொருளை பயபடுத்தி உளவு பார்க்க முடியும். தான் விளக்கம் அளிப்பதற்கு பதிலாக, 4 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை அரசாங்கம் கேட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா வழக்கிலும் இதேபோன்று தான் பேஸ்புக்கிடம் இருந்து பதில் கோரப்பட்டது. கேம்பிரிட்ஜ் வழக்கில், ஐரோப்பிய சட்டத்தின் கீழ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவில் சிபிஐ இன்னும் தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகிறது.
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைAFP
வாட்ஸ்ஆப்பில் இது போன்ற தகவல் திருட்டு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது ஆவணங்களில் இருந்து தெளிவாகிறது. எனவே, கலிபோர்னியா நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் வழக்குத் தாக்கல் செய்வதற்குப் பின்னால் பெரிய உத்தி ஏதேனும் இருக்கிறதா?
அமெரிக்காவில் வாட்ஸ்ப் வழக்கு பதிவு செய்திருக்கிறது
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ மற்றும் அதன் துணை நிறுவனமான கியூ சைபர் டெக்னாலஜிஸ் லிமிடெட் மீது வாட்ஸ்அப் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. வாட்ஸ்ஆப் உடன் பேஸ்புக் நிறுவனமும் இந்த வழக்கின் ஒரு கட்சி என்பது சுவராஸ்யமான விஷயமாகும். பேஸ்புக் வாட்ஸ்ஆப்பிற்கு சொந்தமானது, ஆனால் இந்த விஷயத்தில், வாட்ஸ்ஆப்பின் சேவை வழங்குநராக பேஸ்புக் கூறப்பட்டுள்ளது, இது வாட்ஸ்ஆப்பிற்கு உள்கட்டமைப்பையும் மற்றும் பாதுகாப்பு கேடயத்தை வழங்குகிறது.
தனது குழுவால் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தரவுகள் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதாக பேஸ்புக் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டது. பேஸ்புக் தனது தளம் பல பயன்பாடுகள் மூலம் தரவுகளை பதுக்கி, தரவு வணிகத்தை செய்கிறது என்பதை ஒப்புக்கொண்டது.
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியா உட்பட பல நாடுகளில் ஜனநாயக செயல்முறையை பாதிக்க முயற்சிகள் செய்யும் நிறுவனங்களில் ஒன்று கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்று கூறுகிறது. வாட்ஸ்ஆப் எப்போதுமே அதன் தளத்தை பாதுகாப்பானது, சாட்டிங், வாட்ஸ்அப் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், சாட்டிங், குரூப் சாட்டிங் அனைத்தும் பாதுகாப்பானது என்று சொல்கிறது. அதுமட்டுமல்ல, வீடியோக்கள், குரல் செய்திகள் மற்றும் கோப்பு இடமாற்றங்கள் செய்வது அனைத்தும் பாதுகாப்பானது, கணினியில் மறையாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று உறுதி கூறுகிறது.
இஸ்ரேலிய நிறுவனம் ஒரு மொபைல் போன் மூலம் வாட்ஸ்அப்பின் அமைப்பை ஹேக் செய்தது என்பது கலிபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த மென்பொருளின் பயன்பாட்டில், ஒரு வைரஸ் ஸ்மார்ட் தொலைபேசியில் நுழைந்து தவறவிட்ட அழைப்பு மூலம் அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது. தொலைபேசியின் கேமரா அந்த நபர் எங்கு செல்கிறார், யாரை சந்திக்கிறார், அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பது போன்ற தகவல்களை சேகரிக்கிறது.
இப்படி உளவு பார்ப்பதற்காக ஏர்டெல், எம்.டி.என்.எல் உள்ளிட்ட இந்தியாவின் 8 மொபைல் நெட்வொர்க்குகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி, 2018 ஜனவரி முதல் 2019 மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மக்களை உளவு பார்த்தது. அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரேலிய நிறுவனத்திடம் இழப்பீடு கோரிய வாட்ஸ்அப் வழக்கு தொடுத்துள்ளது. இதுபுறம் இருக்கட்டும், இப்போது நமக்கு எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தியாவில் மொபைலில் ஹேக் செய்யப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்?
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
வாட்ஸ்ப், சிட்டிசன் லேப் மற்றும் என்.எஸ்.ஓ
NSO ஒரு இஸ்ரேலிய நிறுவனமாக இருந்தாலும், அதன் உரிமையாளர் ஐரோப்பியர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், ஐரோப்பாவில் உள்ள ஒரு தனியார் ஈக்விட்டி நிறுவனமான நோவல்பினா கேபிடல் எல்.எல்.பி, என்.எஸ்.ஓவை 100 கோடி டாலருக்கு வாங்கியது. பிசினஸ் இன்சைடரின், பெக்கி பீட்டர்சன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு என்.எஸ்.ஓவின் லாபம் 125 மில்லியன் டாலர்கள்.
பில்லியன்கணக்கில் ஒரு உளவு நிறுவனம் வருவாய் ஈட்டும் என்றால், பேஸ்புக் போன்ற நிறுவனங்களும், அதன் துணை நிறுவனங்களும் தங்களுடைய சேவையை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களின் தரவை விற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் ஈட்டும்?
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட அரசு அல்லது அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தனது மென்பொருள் தகவல்களை வழங்குவதாக என்.எஸ்.ஓ கூறுகிறது. மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக உளவு பார்க்கவும் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவது தவறானது. தற்போது, சந்தேகத்தின் இலக்கு, இப்போது இந்திய அரசு மீது வந்துவிட்டது. இந்த அறிக்கையின்படி, 10 சாதனங்களை ஹேக் செய்ய 4.61 கோடி ரூபாயும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு 3.55 கோடி ரூபாயும் செலவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கேள்வி என்னவென்றால், இஸ்ரேலிய மென்பொருளின் மூலம், இந்தியர்களை உளவு பார்க்க கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டது எந்த இந்திய நிறுவனம்? அங்கீகரிக்கப்படாத மத்திய அரசு நிறுவனங்களால் இந்த உளவு பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது இந்திய சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியதாகும்.
வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த உளவு வேலை செய்யப்பட்டிருந்தால், அது முழு நாட்டிற்குமே எச்சரிக்கை அடிக்கும் ஆபத்து மணி என்றே சொல்லலாம்.
இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த விஷயத்தை என்.ஐ.ஏ அல்லது வேறு திறமையான நிறுவனம் விசாரித்து, அரசாங்கத்திற்கு உண்மை விளக்கங்களை அளிக்க வேண்டும். கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் லேப் கடந்த ஆண்டு செப்டம்பரில் 45 நாடுகளில் என்.எஸ்.ஓ மூலம் வாட்ஸ்அப் அத்து மீறுவதாகக் கூறியது. இந்தியாவில் இதுவரை 17 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளன என்பதை அவர்களில் பெரும்பாலோர் சிட்டிசன் லேப் மூலம் தெரிந்து கொண்டுள்ளனர். கேள்வி என்னவென்றால், வாட்ஸ்அப் பயனர்களுடனான ஒப்பந்தத்தில் சிட்டிசன் லேப் பற்றி எங்கும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த அத்துமீறல் குறித்து உடனடியாக ஏன் அதன் இந்திய வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் நிறுவனம் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை?
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைAFP

தொலைபேசி ஒட்டுக்கேட்பதில் கடுமையான சட்டம், ஆனால் டிஜிட்டல் திருட்டில் அலட்சியம்

இந்தியாவில், பாரம்பரிய தகவல் தொடர்பு அமைப்பு டெலிகிராஃப் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. தொலைபேசி ஒட்டுக்கேட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் ஒரு வலுவான சட்ட அமைப்பை உருவாக்கியது, இது கடந்த வாரம் மும்பை உயர் நீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மொபைல் மற்றும் இணையத்தின் புதிய அமைப்பில் பழைய சட்டங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன என்பது வாட்ஸ்அப் வழக்கில் இருந்து தெளிவாகிறது. கடந்த தசாப்தத்தில், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பில்லியன் கணக்கான தரவுகளை உளவு பார்த்ததற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும் குற்றம் செய்த நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆபரேஷன் ப்ரிஸ்ம் (Operation prism) கூறுகிறது.
புட்டசாமி வழக்கை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வு, அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் தனியுரிமைக்கான உரிமையானது வாழ்க்கைக்கான உரிமை என்று கூறப்பட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு தலையிட்டு அவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன? 2020 ஜனவரியில், சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு எதையும் செய்யாவிட்டால், மொபைல் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களின் அத்துமீறலைத் தடுக்க கடுமையான பொறுப்புக்கூறலை உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டாமா?

பாதுகாப்பு பிரச்சினையில் கட்சி அரசியல் ஏன்?

பிரணாப் முகர்ஜி மற்றும் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோரை உளவு பார்த்த விவகாரத்தை கட்சி விஷயமாக மாற்ற முயன்றார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். ஆனால் இது பொது மக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விஷயம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கர்நாடகாவில், காங்கிரஸின் பழைய அரசாங்கமும் மதச்சார்பற்ற ஜனதா தளமும், பாஜக தலைவர்களை உளவு பார்த்தன, இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, நீதிபதிகளின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, இப்படி உளவு பார்ப்பது, மக்களின் வாழ்க்கையில் தலையிடுவதும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவது என்பதும் தெளிவாகிறது. இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்ஆப் பயனர்கள் உள்ளனர். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரான ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் இஸ்ரேலிய மென்பொருள் மூலம் தொலைபேசியைக் கண்காணித்து கொலை செய்யப்பட்டார். எனவே, தற்போது அம்பலமாகியிருக்கும் விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொண்டு, மத்திய அரசு வெளிப்படையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, உளவுத்துறையையும் சட்டத்திற்குள் கட்டுப்பட்டு நடக்குமாறு சட்ட லகானை இறுக்க வேண்டும்.
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
வாட்ஸ்ப் உத்தி
NSO போன்ற டஜன் கணக்கான இஸ்ரேலிய நிறுவனங்கள் டிஜிட்டல் அரங்கில் உளவு பார்க்க உதவுகின்றன.
அமெரிக்காவில், இணையம் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் பெரும்பாலானவை இஸ்ரேலின் யூத லாபியை வைத்திருக்கின்றன. பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், பல பயன்பாடுகள் மற்றும் தரவு தரகர்கள் மூலம் தரவின் வணிகத்தையும் உளவுத்துறையையும் வெளிப்படையாக ஊக்குவிக்கின்றன. என்.எஸ்.ஓ மற்றும் அதன் இணை நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் ஏன் வழக்குத் தாக்கல் செய்துள்ளது?
இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 2008 ஆம் ஆண்டில் ஐ.டி சட்டத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு, 2009 மற்றும் 2011 ஆண்டுகளில், தரவு பாதுகாப்புக்காக பல விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு, சமூக ஊடக நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சமூக ஊடக நிறுவனங்களின் அதிருப்தியானது, பாஜக, ஆம் ஆத்மி கட்சி போன்றவற்றிற்கு அரசியல் ஆதாயமாக மாறியது. டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் இணைய நிறுவனங்கள் விரிவாக்கத்தை மேற்கொள்ள மோதி அரசு அனுமதித்தது. ஆனால் அவற்றை ஒழுங்குபடுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் அச்சுறுத்தல் மற்றும் நீதித்துறை தலையீட்டைத் தொடர்ந்து, இடைநிலை நிறுவனங்களின் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்காக வரைவு விதி 2018 டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இந்த விதிகளை அமல்படுத்திய பிறகு, வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை இந்தியாவில் அமைக்க வேண்டும். அதோடு, ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இதன் காரணமாக, இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் சட்டப்பூர்வமான பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டது. அதோடு, அதிக அளவு வரியும் செலுத்த வேண்டும்.
மக்களின் தேசிய நலனையும் தனியுரிமையையும் பாதுகாப்பதாகக் கூறும் அரசாங்கமும் இந்த நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. அதனால் தான், இந்த விதிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அடுத்த 3 மாதங்களில் இந்த விதிகளை அமல்படுத்துவதன் மூலம், சமூக ஊடக நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் சரி செய்யப்படும் என்று கடந்த மாதம் அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவில் அரசாங்கத்தின் ஒழுங்குமுறையை நிறுத்த முயற்சிக்கிறதா, அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்து, தகவல் திருட்டு குறித்த அச்சத்தைக் காட்டுகிறதா? இதுவே இப்போது அனைவரின் முன் எழும் பிரம்மாண்டமான கேள்வி.

No comments

Powered by Blogger.