Header Ads

Ads Bar

பிரேசில் கடற்கரையில் சிந்திய 'மர்ம எண்ணெய்' - எங்கிருந்து வந்தது?

அடர்த்தியான எண்ணெய்படத்தின் காப்புரிமைREUTERS
கடந்த சில வாரங்களில் பிரேசில் கடற்கரைகளில் சிந்திய எண்ணெய் குறித்து பல சந்தேகங்களும், ஊகங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, சம்பவத்துக்கு காரணமாக ஒரு கப்பலை அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்த கப்பல்தான் எண்ணெயை சிந்தியிருக்கலாம் என நம்புவதாகவும் பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்பு, கப்பல்கள் செல்லும் கடற்பாதைகள் குறித்து பல நிபுணர்களிடம் கேட்டு வருவதாகவும், சிந்திய எண்ணெய் குறித்து கண்டறிய எந்த நாட்டில் என்ன வகையான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் பிரேசிலின் கடற்கரைகளிலும், வட கிழக்கு பிரேசிலின் சதுப்பு நிலக் காடுகளிலும் கச்சா எண்ணெய் சிந்தியது.
பிரேசிலில் உள்ள 9 மாநிலங்கள், தங்கள் கடற்கரையில் சிந்திய அடர்த்தியான கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்து வருகின்றன. இதுவரை 1000 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் எங்கிருந்து வருகிறது?

கச்சா எண்ணெய் எங்கிருந்து உற்பத்தி ஆகிறதோ அதைப் பொறுத்து அதில் சில குறிப்பிட்ட அம்சங்கள் அமைந்திருக்கும்.
பிரேசில் சுற்றுலாத்துறை அமைச்சர், அந்த எண்ணெய் பிரேசிலை சேர்ந்தது இல்லை என்றும், அதை சோதித்து பார்த்ததில் அது "வெனிசுவேலாவை சார்ந்ததாக இருக்கலாம்" என்றும் தெரிவித்தார்.
ஆனால், வெனிசுவேலாவோ அது தங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அப்படியானால் அது எங்கிருந்து வருகிறது?

இதுவரை நடைபெற்ற விசாரணைகள் அனைத்தும் பிரேசிலை சேர்ந்த நிறுவனங்களால் நடத்தப்பட்டுள்ளன. பிரேசிலின் பாஹியா மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் இரண்டு மாநிலங்களில் உள்ள எண்ணெயை எடுத்து சோதனை செய்துள்ளது.
"எங்களிடம் உள்ள எண்ணெய் இருப்புகளை வைத்து பார்த்தால், அந்த எண்ணெய் வெனிசுவேலாவின் பெட்ரோலிய படுகைக்கு ஒத்ததாக உள்ளது," என பிரேசில் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையின் இயக்குநர் ஓலிவியா மரியா கார்டெய்ரோ டே ஒலிவிய்ரா தெரிவித்தார்.
பிரேசிலின் அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோபிராஸ், வெனிசுவேலாவின் மூன்று எண்ணெய் வயல்களில் இருந்து மட்டுமே எண்ணெய் வருவதாக கூறுகிறது.
சிந்திய கச்சா எண்ணெயின் மாதிரியை சோதனை செய்ய அமெரிக்காவில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடற்கரையை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள்படத்தின் காப்புரிமைREUTERS
Image captionகடற்கரையை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள்
"எண்ணெய்கென்று சில அம்சங்கள் உள்ளன," என இந்த ஆய்வில் பணிபுரியும் ஆய்வாளரான கிறிஸ்டோஃபர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான சந்தேகத்திற்கிடமான எண்ணெய் சிந்திய சம்பவங்களில், ஆய்வாளர்கள் அந்த எண்ணெய்க்கு குறிப்பிட்ட வகை கச்சா எண்ணெயின் அம்சங்கள் உள்ளதாக என்று சோதனை செய்வார்கள்.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் சீக்கிரம் வெளியிடப்படும். மேலும் நார்வே மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சோதனை செய்யப்படவுள்ளது.

அது எண்ணெய் டாங்கரிலிருந்து வந்ததா?

வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயின் ஒரு பகுதி ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் ஆசியாவுக்கு அனுப்பப்படுகிறது. அந்த பாதை தற்போது பிரேசிலில் எண்ணெய் சிந்திய கடற்கரை பகுதியை ஒட்டியதுதான்.
டாங்கர் பாதை
கச்சா எண்ணெய் ஏற்றுமதி வெனிசுவேலா பொருளாதாரத்தின் முக்கிய பங்காற்றுகிறது.
சமீப மாத்ததில் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளால், அமெரிக்காவுக்கான வெனிசுவேலாவின் எண்ணெய் இறக்குமதி நின்றுபோனது.
எனவே தற்போது ஆசியாவில், சீனா மற்றும் இந்தியாதான் வெனிசுவேலாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. ஆனால் இந்த வர்த்தகமும் கடந்த சில வருடங்களில் பெரிதும் குறைந்துவிட்டது.
வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மடூராவின் நிர்வாகத்திற்கு உதவும் எந்த ஒரு நிறுவனத்தின் மீதும் தடைவிதிக்கப்படும் என அமெரிக்கா கூறியதை அடுத்து, அது வெனிசுவேலாவுடன் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.
வெனிசுவேலாவின் எண்ணெயை எடுத்து செல்கின்ற கப்பல்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க தங்களுது சமிக்ஞையை நிறுத்திவிடும். எனவே அந்த வகையில் அவர்களின் வாடிக்கையாளர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக அது இருக்கும் என ஆற்றல் நுண்ணறிவு நிறுவனத்தின் ஆய்வாளர் கெப்லர் தெரிவிக்கிறார்.
இம்மாதிரியாக கடந்த மே மாதத்திலிருந்து வந்த 14 கப்பல்கள் தங்களது சமிக்ஞையை நிறுத்திவிட்டன என்கிறார் கெப்லர்.

அது எப்படி நடந்திருக்கும்?

இந்த சம்பவத்திற்கு தங்களின் அண்டை நாடுகளை குற்றம் சொல்ல விரும்பவில்லை என பிரேசில் தெரிவித்துவிட்டது.
இம்மாதிரியாக சமிக்ஞை நிறுத்தப்படுவதால் ஏதேனும் கப்பல் விபத்துக்குள்ளாகி அது தெரியப்படுத்தாமலும் போயிருக்கலாம் என்று ஓர் ஊகம் கூறியுள்ளது.
வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி
தங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து எண்ணெய் கொட்டிவிட்டதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என வெனிசுவேலா தெரிவித்துள்ளது.
ஏதேனும் மூழ்கிய கப்பலில் இருந்தும் இந்த எண்ணெய் சிந்தியிருக்கலாம் என்பது மற்றொருமொரு ஊகம்.
மூன்றாவது, இது ஒரு கப்பலைவிட்டு மற்றொரு கப்பலுக்கு மாற்றும்போது நடந்திருக்கலாம்.
பொதுவாக பைப்புகள் மற்றும் பம்புகளை கொண்டு டாங்கர்களில் இருந்து எண்ணெய் மாற்றப்படும் 600 டன் ஆயில்களை மாற்ற 30 நிமிடங்கள் தேவைப்படும். இது தற்போது சுத்தம் செய்யப்பட்டதைக் காட்டிலும் குறைந்த அளவே.
ஆனால் பிரேசில் கடற்கரையில் கப்பல்களை சரியாக கண்காணிக்காமல் இது எந்த கப்பலில் இருந்து சிந்தியிருக்கும் என்பதை கண்டுபிடிப்பது கடினமாகும்.
பொதுவாக இம்மாதிரியான எண்ணெய் சிந்தினால் அதை செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து கண்டுபிடிப்பார்கள். ஆனால் இதில் செயற்கைக்கோள் தகவல்களும் போதுமானதாக இல்லை என்கிறார் செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனமான கே சாட்டை சேர்ந்த ராப் அயாசே.

No comments

Powered by Blogger.