Header Ads

Ads Bar

பேஸ்புக் பயனாளர்கள் 26 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு: ஹேக்கர்கள் இணையதளத்தில் தகவல்கள் வெளியீடு








வாஷிங்டன்: பேஸ்புக் பயனாளர்கள் 26 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் விவரங்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியட்நாமில் செயல்படும் ஹேக்கர்கள் குழு ஒன்று பேஸ்புக்கில் உள்ள தொழில்நுட்ப வேர்டுகளை பயன்படுத்தி தகவல்களை திருடியதாக பிரிட்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் தெரிவித்திருக்கிறார். 26 கோடி பேரின் பயனாளர்களின் பெயர்கள், அலைபேசி எண்கள் மற்றும் பேஸ்புக் ஐடி ஆகியவற்றின் குறிப்பிட்ட ஹேக்கர்கள் தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் வணிக விளம்பரங்கள், அரசியல் பிரச்சாரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக தொழில்நுட்ப வல்லுநர் கூறியுள்ளார்.

தகவல் திருட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ள பேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. உலகில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் தொடர்ந்து எதிரொலிக்கும் தகவல் திருட்டு அந்த நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

பேஸ்புக் பயனாளர்கள் நண்பர்களுக்கு மட்டுமே தகவல்கள் தெரியும் வகையில் மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல பேஸ்புக்கை தவிர பிற தளங்களில் புரோஃபைலை இணைக்கலாமா என்ற கேள்விக்கு வேண்டாம் என்றே பதில் கொடுக்க வேண்டும், சந்தேகத்துக்குரிய வகையில் வரும் தகவல்களை பார்க்க வேண்டாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பேஸ்புக் பயனாளர்கள் அடிக்கடி பாஸ்வேர்ட்டை மாற்ற வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.



No comments

Powered by Blogger.