Header Ads

Ads Bar

சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் -தெலுங்கானா ஐகோர்ட்டு



ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த நவம்பர் 27-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மொத்தம் நான்கு பேரை குற்றவாளிகள் என கூறி கைது செய்தனர். அவர்களை குற்றம் நடந்த இடத்துக்கு கடந்த 6-ம் தேதி போலீசார் அழைத்துச் சென்று தடயங்களை சேகரித்தனர். அப்போது அவர்கள் தப்பியோட முயன்றதாக கூறி, 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொலை செய்தனர். 

இந்த என்கவுண்டர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக  ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4  பேரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. அது  வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடல்களை மனித உரிமை ஆணையத்தின் குழு நேரடியாக சென்று ஆய்வு செய்தது. இந்த நிலையில், 4 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை விசாரித்த ஐகோர்ட், தனியார் மருத்துவர் குழு ஒன்றை டெல்லியிலிருந்து வரவழைத்து, 4 பேர் உடலுக்கும் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 




No comments

Powered by Blogger.