Header Ads

Ads Bar

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன் வைக்கப்பட்டுள்ள 5 சவால்கள் என்னென்ன?


போரிஸ் ஜான்சன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிப் பெற்று அங்கு போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகியுள்ள நிலையில், அவர் முன்பு உள்ள ஐந்து முக்கிய சவால்கள் தொடர்பாக, பிபிசியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த செய்தியாளர்கள் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பு இது.

1. பிரெக்ஸிட்டை நிறைவேற்றுதல்

பிரிட்டனின் பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள போரிஸ் ஜான்சன் அந்நாட்டு மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியே கொண்டுவருவதே அதில் முதலாவது முக்கிய பணி.
நடந்த முடிந்த தேர்தலில் பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களில் வெற்றிபெற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கிட்டத்தட்ட எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை.
இருப்பினும், பிரெக்ஸிட்டை நிறைவேற்றிய உடன், அதற்கு பிந்தைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான 2020 டிசம்பர் 31க்குள் அனைத்து பணிகளையும் போரிஸால் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், பிரெக்ஸிட்டிக்கு பிறகான காலக்கெடுவை நீட்டிக்கும்படி கேட்க மாட்டேன் என்று போரிஸ் கூறுகிறார்.
அதே சூழ்நிலையில், பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய காலத்திற்கு பிறகு, பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக போக்குவரத்தை எளிதாக்கும் தனது வாக்குறுதியை போரிஸ் எப்படி நிறைவேற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2. தேசிய சுகாதார சேவைக்கு கூடுதல் நிதியளித்தல்

பிரிட்டனில் நடந்து முடிந்த தேர்தலில் மற்ற முக்கிய கட்சிகளை போன்று கன்சர்வேட்டிவ் கட்சியும், அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைக்கு கூடுதல் நிதியளிப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
எனினும், அரசியல் கட்சிகள் நினைப்பதை விட பிரிட்டனில் மருத்துவ பணியாளர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னுள்ள 5 சவால்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையையும், மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஈடுசெய்வதற்கு அதிகளவிலான நிதி மட்டுமின்றி நேரமும் பிடிக்கும்.
மருத்துவத்துறையை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவது, நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைப்பது போன்ற பல்வேறு வேலைகள் போரிஸ் ஜான்சனுக்கு உள்ளது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், புதிய மருத்துவ பணியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிப்பதற்கு மிகுந்த நேரம் பிடிக்கும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.

3. சமூக பாதுகாப்பு நெருக்கடி

மூத்த குடிமக்களையும் மாற்றுத்திறனாளிகளையும் ஆதரிக்கும் சேவை துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது போரிஸ் ஜான்சனின் பட்டியலில் முன்னுரிமை பெற வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக, தான் ஆட்சியமைத்த 100 நாட்களில் மற்ற கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று போரிஸ் கூறியுள்ளார். ஆனால், கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது, கன்சர்வேட்டிவ் கட்சி இதுதொடர்பாக அளித்த வாக்குறுதிகளை திறம்பட நிறைவேற்றவில்லை.
ஒவ்வொருமுறை ஆட்சி மாறும்போதும், புதிதாக பொறுப்பேற்கும் அரசுகள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தவறுகின்றன.
பராமரிப்பு செலவுகளுக்காக எவரும் தங்களது வீடுகளை விற்கும் நிலை இனி இருக்காது என்று தெரிவித்து, போரிஸ் கடந்த ஜூலை மாதம் முன்வைத்த திட்டங்கள் இதுவரை முழு வடிவம் பெறவில்லை.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலனை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், குழந்தைகள் சார்ந்த சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடும் அடக்கம். எனவே, தற்போதுள்ள பிரச்சனைகளை களைவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

4. காலநிலை மாற்றம்


பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னுள்ள 5 சவால்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சுற்றுச்சூழல் சார்ந்த கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதில் காலநிலை மாற்றத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம், காலநிலை மாற்றம் சார்ந்த ஐக்கிய நாடுகள் அவையின் மிக முக்கிய கூட்டம் ஒன்று கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
கார்பன் வெளியேற்றத்தை எப்படி குறைப்போம் என்பது குறித்த திட்டம் இல்லாமல், பிரிட்டன் இந்த கூட்டத்தில் பங்கேற்குமானால் அது நாட்டுக்கு மிகுந்த அவமரியாதையை ஏற்படுத்தக் கூடும்.
அரசியல்வாதிகள், காலநிலை வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை கொண்ட காலநிலை மாற்றம் குறித்த பிரிட்டனின் ஆலோசனைக் குழு, நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளை விரைவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது.
பெரிய அளவிலான சாலை மற்றும் விமான நிலையங்களை கட்டுவது கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைக் அதிகரிப்பதுடன், அதுவே உலகளாவிய வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாகிறது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

5. குடியேற்ற முறையை மேம்படுத்துதல்


பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னுள்ள 5 சவால்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள ஆஸ்திரேலியாவை ஒத்த புள்ளி அடிப்படையிலான குடியேற்ற திட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதலாவதாக, இந்த திட்டத்தை கன்சர்வேட்டிவ் கட்சியினர் நிர்ணயித்த காலக்கெடுவான ஜனவரி, 2021க்குள் நிறைவேற்ற முடியுமா?
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு திட்டங்களில் ஏற்கனவே தோல்வியை சந்தித்துள்ள அரசாங்கம், இப்படிப்பட்ட மிகப் பெரிய திட்டத்தை ஊழியர்கள் பற்றாற்குறை, சட்ட சிக்கல்கள் ஆகியவற்றுடன் சேர்த்து எப்படி நிறைவேற்ற போகிறது என்ற கேள்வி எழுகிறது.
அதுமட்டுமின்றி, தற்போதை அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியும், இறுதித் திட்டமும் ஒன்றுபோல் இருக்குமா என்பதை உறுதிசெய்ய வேண்டியது யாருடைய பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.
பிரிட்டன் முழுவதும் பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பற்றாற்குறை நிலவுகிறது, அதை சரிசெய்வதற்கு குடியேற்றம் உதவலாம். ஆனால், அதன் பல்வேறு கோணங்களையும் ஆராய வேண்டியுள்ளது.No comments

Powered by Blogger.