Header Ads

Ads Bar

எனது கருத்துகளுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - நடிகர் ராகவா லாரன்ஸ்



சென்னை,

தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான அவர் சில அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

சிறுவயதில் தான் நடிகர் கமல்ஹாசனின் போஸ்டரில் சாணி அடித்ததாக இசை வெளியீட்டு விழாவில் அவர் குறிப்பிட்டார். இதற்கு கமல் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் கமல் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்றும் தனது முழு பேச்சை கேட்டால் உண்மை புரியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் அந்த விழாவில் பேசிய போது, நடிகர் ரஜினிகாந்த் குறித்து நாகரீகமற்ற முறையில் சிலர் விமர்சனம் செய்து வருவதாக அவர் கூறினார். “என்னை பிடிக்காதவர்கள் எல்லாம் நான் வருவதற்குள் செத்து விடுங்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு தலைவரா?” என்று அவர் பேசினார்.

ராகவா லாரன்ஸ் பேசிய இந்த கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், “நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் பொறுப்பல்ல

அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தான் இப்பொழுது ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அதை முடித்து விட்டு வந்து அனைவருக்கும் பேட்டி கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.




No comments

Powered by Blogger.