Header Ads

Ads Bar

புதிய திருப்பம்: இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழையும் மக்கள் - பிபிசி கள ஆய்வு


இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழையும் மக்கள் - பிபிசி கள ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் குடியேறிகள் குறித்து நாம் விவாதித்து கொண்டிருக்கும்போது, இந்தியாவிலிருந்து பலர் வங்கதேசத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்வது அதிகரித்துள்ளதாக பிபிசி கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்களில் பலர் தங்களை வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் பல்வேறு காரணங்களுக்காக பல ஆண்டுகள் முன்பு இந்தியாவிற்கு வந்ததாகவும் கூறுகிறார்கள்.
ஆனால், இவர்களை ஊடுருவல்காரர்களாகவே வங்கதேசம் கருதுகிறது.

எல்லைக் காடுகள் வழியே

இந்தியாவிலிருந்து எல்லைக் காடுகள் வழியாக ஏராளமானோர் வங்கதேசத்துக்குள் நுழைவதும் பல முறை அவர்கள் பிடிபடுவதும் தொடர் கதையாகி வருவதாக தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழையும் மக்கள் - பிபிசி கள ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இப்போது நான் ஜினைதா மாவட்டத்தின் மொஹேஷ்புர் பகுதியில் இருக்கிறேன். இந்த எல்லை வழியாகத்தான் இரவு நேரத்தில் பலர் வங்கதேசத்துக்குள் நுழைகிறார்கள். இதனால் கவலை அடைந்துள்ள எல்லை கிராமவாசிகள், சட்டவிரோதமாக வருவோரை தடுக்க குழு அமைத்துள்ளனர்," என்கிறார் பிபிசி செய்தியாளர் அபுல் கலாம் ஆஸாத்.
அண்டை நாடுகளில் இருந்து வருவோர் குறித்து, வங்கதேச எல்லை காவல் படையினருக்கு எச்சரிக்கை விடுப்பது கிராம குழுவின் பணி.
ஜதோவ்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரு கிராமங்களை சேர்ந்த இருபத்து ஏழு பேர் அந்த குழுவில் உள்ளனர்.

Presentational grey line

இந்தியா - வங்க தேச எல்லைக்கு சென்று இது குறித்து விரிவான செய்திகளை சேகரித்துள்ளதுபிபிசி: அதனை மூன்று நிமிட காணொளியில் காண:

Presentational grey line

எல்லை பாதுகாப்பு குழு

"தேச நலனுக்காக நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். பல ரோஹிஞ்சாக்களால் இங்கு பிரச்னை ஏற்பட்டது. அதுபோலவே, இப்போது இந்தியாவில் இருந்தும் பலர் வருவதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்," என்கிறார் ஊடுருவல் தடுப்புக் குழு தலைவர் அப்துல் மன்னான்.
கடந்த ஒன்பதாம் தேதி, இந்தியாவிலிருந்து வந்த பன்னிரண்டு பேர் வங்கதேசத்தில் பிடிபட்டனர்.

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழையும் மக்கள் - பிபிசி கள ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இந்தியாவில் வங்காளிகளுக்கு பிரச்னை அதிகமாக உள்ளது. அவர்கள் பிடிக்கப்பட்டு வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால்தான் அங்கு வாழ நாங்கள் விரும்பவில்லை," என்கிறார் அப்படி பிடிப்பட்ட ஒருவர்.
தங்களை அவர்கள் வங்காளிகள் எனவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். வேலைக்காக இந்தியா சென்றதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், வங்கதேசத்தின் நிலைப்பாடு வேறாக இருக்கிறது,

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழையும் மக்கள் - பிபிசி கள ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எல்லைத் தாண்டி வந்த அனைவரும் ஊடுருவல்காரர்கள் என்றும், அவர்களிடம் தேசிய அடையாள அட்டையோ வங்கதேச கடவுச்சீட்டோ இல்லை என்றும் வங்கதேச எல்லைக் காவல் படை கூறுகிறது.
பெங்களூருவில் வேலைக்காக ஏழு மாதங்களுக்கு முன்பு சென்ற சோபுஜ் கடந்த 10-ஆம் தேதி வங்கதேசம் திரும்பியதாக கூறுகிறார்.
"வங்கதேச எல்லைக்குள் நுழைந்ததும் என்னுடன் மேலும் மூன்று பேர் இருந்தார்கள். ஐம்பதுக்கும் அதிகமானோர் எங்களைப் போல வங்கதேசத்துக்குள் நுழைவதை பார்த்தேன்," என்கிறார் சோபுஜ்.

என்.ஆர்.சி பிரச்சனை

வங்கதேச எல்லையில், சமீபத்திய மாதங்களாக, எல்லைத் தாண்டிய ஊடுருவல் பற்றிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது நீண்ட காலமாக விவாதிக்கப்படும் விஷயம் என்று கூறுகிறார் மனித உரிமைகள் செயல்பாட்டாளர் அப்துர் ரஹ்மான்.
"மூன்றில் ஒரு பங்கு பேர் பிடிபடுகிறார்கள், அவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள். இந்தியாவில் என்ஆர்சி பிரச்சனை பெரிதாக இருப்பதால், அனைவரும் இங்கு வரத் தொடங்கியிருப்பதாக கருதுகிறேன்." என்கிறார் அப்துர் ரஹ்மான். 



No comments

Powered by Blogger.