Header Ads

Ads Bar

பணத்துக்காக “தந்தையின் நண்பர்களால்“ பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி


பணத்திற்காக குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய தந்தைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசித்தரிப்பு புகைப்படம்

இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும், ஆண்கள் வீட்டுக்கு வந்து தன்னை பாலியல் வல்லுறவு செய்தார்கள் என்று 12 வயதான சிறுமி, மனநல ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளார். சிலர் தன் தந்தைக்குத் தெரிந்தவர்கள். சிலரைத் தெரியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சில வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
தனது தந்தையார் மது அருந்துவதற்காக தனது நண்பர்களை வீட்டுக்கு வரவழைக்கத் தொடங்கியதில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பமானது என்று அந்தச் சிறுமி கூறுகிறார். மது போதையில் இருக்கும் ஆண்கள், தன் பெற்றோர் முன்னிலையில் தன்னை இழுத்து, தொட்டுப் பேசி, கட்டிப் பிடிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். சில நேரங்களில் அடைந்து கிடக்கும் ஒற்றைப் படுக்கை அறைக்குள் தன் தாயுடன் ஆண்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஒரு நாள், தன் நண்பர்களில் ஒருவருடன் தன்னையும் படுக்கை அறைக்குள் தன் தந்தை தள்ளி வெளியில் பூட்டிவிட்டார் என்றும், அந்த நபர் தன்னை பாலியல் வல்லுறவு செய்துவிட்டதாகவும் சிறுமி கூறுகிறார்.
குழந்தைப் பருவம் என்பது அந்தச் சிறுமிக்கு கொடூர கனவாகிவிட்டது. ஆண்களுக்கு அவருடைய தந்தை போன் செய்து, மகளுடன் இருப்பதற்கு நேரத்தை முடிவு செய்து, பணம் வாங்கிக் கொள்வது உண்டு. அப்போதிலிருந்து குறைந்தது 30 ஆண்கள் அந்தச் சிறுமியிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருப்பதாக மனநல ஆலோசகர்கள் நம்புகின்றனர்.
செப்டம்பர் 20 ஆம் தேதி, ஆசிரியர்களிடம் இருந்து தங்களுக்குக் கிடைத்த தகவலின்பேரில், குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டு, பாதுகாப்பு இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், பாலியல் வல்லுறவு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது என்று குழந்தைகள் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிறுமி தனது வீட்டின் சுவர்களில் செய்திகளை எழுதியும், வரைந்தும் வந்துள்ளார்.படத்தின் காப்புரிமைNEBULA MP
Image captionஇந்த சிறுமி தனது வீட்டின் சுவர்களில் செய்திகளை எழுதியும், வரைந்தும் வந்துள்ளார்.

இது தொடர்பாக, சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வல்லுறவு, ஆபாச படத்துக்காக சிறுமியைப் பயன்படுத்தியது மற்றும் பாலியல் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து, பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும், அவருடைய தந்தைக்குத் தெரிந்தவர்களான மேலும் 5 ஆண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு தெரிந்த 25 ஆண்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை புலனாய்வு அதிகாரிகள் சேகரித்துள்ளனர். புகைப்படங்களை அந்தச் சிறுமியிடம் காட்டி விசாரித்து வருகின்றனர்.
``யாருடைய முகமும் எனக்கு நினைவில்லை. எதுவும் தெளிவாக நினைவில்லை'' என்று சிறுமி கூறியிருக்கிறார்.
தென்னிந்தியாவில் பசுமையான மலைகள், சுத்தமான காற்று, தெளிந்த நீரோடைகள் நிறைந்த பகுதியில் வளமையான ஒரு நகரில் அந்தக் குடும்பம் வாழ்ந்து வந்தது. ஆனால் அவர்களுடைய நல்ல காலம் இப்போது போய்விட்டது.
செப்டம்பர் மாதம் அந்த நாளில், அந்தப் பகுதியில் வசித்த சிறுமியின் ஆசிரியர்கள் இருவர், இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.
``அந்தச் சிறுமியின் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது. அவர்களுடைய வீட்டில் என்னவோ நடக்கிறது. சிறுமியிடம் பேசிப் பாருங்கள்'' என்று அவர்கள் கூறினர்.
உடனடியாக மகளிர் உதவி மையத்தின் உதவியை பள்ளிக்கூட நிர்வாகம் அணுகியது. மறுநாள் காலை மனநல ஆலோசகர்கள் வந்தனர்.

சிறுமி எழுதியதுபடத்தின் காப்புரிமைNEBULA MP

ஆசிரியர்கள் அறையில் வைத்து நேருக்கு நேராக அவர்கள் பேசினர். இதுபற்றி எதுவும் தெரியாத சிறுமியின் தாயார், மாடியில் வழக்கமாக நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
``உன் குடும்பம் பற்றியும், உன்னைப் பற்றியும் சொல்'' என்று சிறுமியிடம் ஆலோசகர் பேச்சு கொடுத்திருக்கிறார்.
அவர்கள் நான்கு மணி நேரம் பேசினர்.
தன் தந்தைக்கு வேலை இல்லை என்பதால் வீட்டில் தனக்கு கஷ்டம் அதிகமாக உள்ளது என்று சிறுமி கூறியிருக்கிறார். வாடகை கொடுக்காததால் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்ய நேரிடலாம் என்று கூறி அழத் தொடங்கிவிட்டார்.
பிறகு சிறுமி அமைதியாகிவிட்டார். அவருடைய பள்ளியில் உள்ள பாலின பிரிவுகள் பற்றி பேசத் தொடங்கி, குழந்தைகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவது இயல்பாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.
``என் வீட்டிலும் இப்படி நடக்கிறது. என் தாயை என் தந்தை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்குகிறார்'' என்று சிறுமி இடைமறித்துக் கூறினார்.
அதுபற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா என ஆலோசகர் கேட்டார்.

இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடமும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக இது தொடர்பான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.படத்தின் காப்புரிமைAFP
Image captionஇந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடமும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக இது தொடர்பான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒரு முறை தன் தாயைப் பார்க்க வந்த ஒரு நபர் தன்னை தாக்கியதாக சிறுமி கூறினாள். அந்த நபரை என் தாயார் கண்டித்தார். ஆனால், நான் பள்ளிக்கூடம் சென்ற பிறகு, என் தாயைப் பார்க்க நிறைய ஆண்கள் வருவார்கள் என்றும் அவள் கூறினாள்.
சிறுமியின் வீட்டுக்கு நிறைய ஆண்கள் வரத் தொடங்கினர். மது குடித்து முடித்ததும், தாயிடம் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவார்கள் என்றும் சிறுமி குறிப்பிட்டாள்.
கருத்தரிப்பைத் தடுக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது பற்றி தெரியுமா என்று சிறுமியிடம் ஆலோசகர்கள் கேட்டனர்.
``இல்லை. கிடையாது. நாங்கள் ஆணுறைகள் பயன்படுத்துவோம்'' என்று சிறுமி கூறியிருக்கிறாள்.
இந்த உரையாடலின்போது, தாம் பாலியல் உறவுக்கு ஆளாக்கப்பட்டதை அப்போதுதான் முதல்முறையாக சிறுமி ஒப்புக்கொண்டாள்.

இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பொது மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளதோடு, போராட்டங்களையும் தூண்டியுள்ளன.படத்தின் காப்புரிமைAFP
Image captionஇந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பொது மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளதோடு, போராட்டங்களையும் தூண்டியுள்ளன.

அதற்குப் பிறகுதான், தன்னுடைய குழந்தைப் பருவம் எப்படி நாசமாக்கப்பட்டது என்ற கொடூரமான கதையை சிறுமி விவரித்தாள்.
``ஆண்கள் வந்து என் தாயாரை படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அது சாதாரணமானதுதான் என்று நான் நினைத்திருந்தேன். பிறகு தெரியாத ஆண்களுடன் என்னை அறைக்குள் என் தந்தை தள்ளிவிட்டார்'' என்று சிறுமி கூறினாள்.
சில நேரங்களில், கட்டாயப்படுத்தி தம்மை நிர்வாணமாகப் படம் பிடித்து, மற்ற ஆண்களுக்கு தன் தந்தை அனுப்பியதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், மூன்று மாதங்கள் மாதவிலக்கு தள்ளிப்போனதால் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு, சில மருந்துகள் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அந்தச் சிறுமி தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறாள் என்பதை இந்த நிலையில் ஆலோசகர் உறுதி செய்து கொண்டார். குழந்தைகள் நல அதிகாரிகளை அழைத்து, சிறுமியை பாதுகாப்பு இல்லத்துக்கு அழைத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார். அந்தச் சிறுமியிடம் பயம் எதுவும் இல்லை.
ஆசிரியர்களை சந்தித்துவிட்டு சிறுமியின் தாயார் வெளியே வந்தார். தன் மகளை காரில் அழைத்துச் செல்வதைப் பார்த்து அவர் கூச்சல் போட்டிருக்கிறார்.
``என் மகளை நீங்கள் எப்படி அழைத்துச் செல்லலாம்?'' என்று அவர் கேட்டிருக்கிறார்.
சிறுமிக்கு ``உணர்வு ரீதியிலான பிரச்சனைகள் இருப்பதால்'', மனநல ஆலோசனை தர வேண்டி இருக்கிறது என்றும், அதனால் அழைத்துச் செல்வதாகவும் ஆலோசகர் பதில் அளித்துள்ளார்.
``என் அனுமதி இல்லாமல் என் மகளுக்கு மனநல ஆலோசனை தருவதற்கு நீங்கள் யார்?'' என்று தாயார் கேட்டார்.
அவருடைய மகள் அந்த இல்லத்துக்குச் சென்றுவிட்டார். கடந்த இரண்டு மாதங்களாக, மற்ற சிறுமிகளுடன் (அனைவரும் பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்) சிறுமி வாழ்ந்து வருகிறாள்.
குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு விஷயத்தில் இந்தியாவில் உள்ள பதிவுகள் அவமானத்தைத் தருபவையாக உள்ளன. பெரும்பாலான சம்பவங்களில் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள்தான் இதில் ஈடுபடுகின்றனர். உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள், முதலாளிகள் என தெரிந்தவர்கள் இப்படி செய்கிறார்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10,221 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

புள்ளிவிவரம்

இதுபோன்ற கொடூரமான நிகழ்வுகள் இப்போது சாதாரணமாகிவிட்டன என்று ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுமி தங்க வைக்கப்பட்டிருக்கும் இல்லத்தில், தங்களுடைய தந்தையரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான, 12 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மூன்று சிறுமிகள் உள்ளனர்.
தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, கருத்தரித்த நிலையில் இருக்கும் 15 வயது சிறுமியை தேர்வு அறைக்கு அழைத்துச் செல்ல தாம் உதவியதாக ஓர் ஆலோசகர் கூறினார்.
``பிரசவத்துக்குப் பிறகு, குழந்தையைக் கொடுத்துவிடுமாறு நாங்கள் கேட்டோம். என் குழந்தையை நான் ஏன் தர வேண்டும், இது என் தந்தையின் குழந்தை. இதை நான் வளர்ப்பேன் என்று சிறுமி கூறிவிட்டாள்'' என்று ஆலோசகர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிடும் சிறுமி, பாதுகாப்பு இல்லத்தில் நாட்கணக்கில் தொடர்ந்து தூக்கத்தில் இருந்திருக்கிறாள். பிறகு தன்னுடைய அம்மாவை எப்படியெல்லாம் நேசிக்கிறேன் என்று எழுதத் தொடங்கினாள்.
``அவள் எங்களுடன் தகராறு செய்து கொண்டிருந்தாள். அதனால் எங்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக இந்த [பாலியல் வல்லுறவு] கதையை உருவாக்கி இருக்கிறாள்'' என்று சிறுமியின் தாயார் கூறினார்.
ஓரளவுக்கு வசதியாக இருந்த காலம் இருந்தது என்று தாயார் தெரிவித்தார். அவரது கணவர் தன்னுடைய தொழிலில் தினமும் 1,000 ரூபாய் வரை சம்பாதித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

தாயோடு நடத்திய விவாதத்திற்கு பின்னர், முன்கதவில் அந்த பெண் மன்னிக்கவும் என்று எழுதினாள்.படத்தின் காப்புரிமைNEBULA MP
Image captionதாயோடு நடத்திய விவாதத்திற்கு பின்னர், முன்கதவில் அந்த பெண் மன்னிக்கவும் என்று எழுதினாள்.

இப்போது வெறிச்சோடிய அந்த வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிறார். அவருடைய கணவர் சிறையில் இருக்கிறார். மகள் பாதுகாப்பு இல்லத்தில் இருக்கிறார்.
``நான் அக்கறையுள்ள தாய். அவளுக்கு நான் தேவை'' என்று பிபிசியிடம் அந்தத் தாயார் கூறினார்.
உற்சாகம் இல்லாத அந்த வீட்டின் சுவர்களில் இருந்து பெயின்ட் உரிந்து போயுள்ளது. மகள் இல்லாத நிலையில், சுவரில் அவளுடைய கிறுக்கல்கள்தான் தாய்க்கு நினைவுகளாக உள்ளன. ``அவள் சுவர்களில் வரைந்து கொண்டு, கிறுக்கிக் கொண்டிருப்பாள்'' என்று தாயார் தெரிவித்தார்.
``நண்பர்களே. என்னுடைய ஆழமான உணர்வுகளை என்னால் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியும் என்றால், அதுவே ஒரு பெரிய சாதனையாக இருக்கும்'' என்று ஒரு தாளில் எழுதி கதவில் அந்தச் சிறுமி ஒட்டியிருந்தாள்.
சில மாதங்களுக்கு முன்பு அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை நடந்திருக்கிறது.
ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வந்தபோது, நீல நிற எழுதுகோல் எடுத்து, சுவரில் ஒரு பனை மரம் மற்றும் சமையல் சிம்னியில் இருந்து புகை வரும் ஒரு வீட்டின் படத்தை, முன்பக்க கதவில் சிறுமி வரைந்தார். அவளுடைய வயதில் உள்ள நிறைய சிறுமிகளுக்கு இதுதான் கற்பனையாக இருக்கும்.
பிறகு அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டு வாசகத்தை எழுதிவிட்டு சென்றுவிட்டாள்.
``மன்னித்துவிடுங்கள் அம்மா'' என்று சிறுமி எழுதியிருந்தாள். 


No comments

Powered by Blogger.