Header Ads

Ads Bar

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் மகன் பண மோசடியில் ஈடுபட்டாரா?


பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ மகன் பண மோசடியில் ஈடுபட்டாரா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் மகன் பண மோசடியில் ஈடுபட்டாரா?
பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் மகன் ஃப்ளவியோ தன் மீதான பண மோசடி புகார்களை மறுத்துள்ளார்.
ஃப்ளவியொ தனது சாக்லேட் கடையின் மூலம் மக்கள் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியான சூழலில் அவரது கடை உள்ளிட்ட 24 இடங்களில் இந்த வாரத் தொடக்கத்தில் சோதனைகள் நடந்தன.
பொல்சனாரூவின் முன்னாள் மனைவிக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்தன.
இது குறித்து வியாழக்கிழமை பேசிய சயீர் பொல்சனாரூ, "நான் எனக்காக மட்டும்தான் பதில் சொல்ல முடியும்," என்றார்.
அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளப் பிரேசில் சென்று இருந்தபோது பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வர அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பொல்சனாரூ இந்தியா வரயிருக்கிறார். 



No comments

Powered by Blogger.