Header Ads

Ads Bar

டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மற்றும் ஜெர்மனி - காரணம் தெரியுமா?


Trumpபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மற்றும் ஜெர்மனி


அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மற்றும் ஜெர்மனி - காரணம் தெரியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்உக்கு எதிராகக் காட்டமான கருத்துகளை ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய இருநாடுகள் வெளியிட்டுள்ளன. ஒரு எரிவாயு பைப்லைன் நிறுவனத்துக்கு எதிராகப் பொருளாதார தடைவிதித்ததே இதற்குக் காரணம். ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யக் கடலுக்கு அடியே குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. நோர்ட் ஸ்ட்ரீம் 2 என அழைக்கப்படும் அந்த திட்டத்தின் மதிப்பு 11 பில்லியன் டாலர்கள். இந்த திட்டத்தை அபாயகரமானதாகக் கருதுகிறது அமெரிக்கா.

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மற்றும் ஜெர்மனி - காரணம் தெரியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது ரஷ்யாவின்பிடி ஐரோப்பாவில் இறுகும் என அஞ்சுகிறது அமெரிக்கா. 1225 கி.மீ நீளம் கொண்ட இந்த கேஸ் பைப்லைன் திட்டத்தின் காரணமாக ரஷ்யாவின் பணயகைதியாக ஜெர்மன் மாற வாய்ப்புள்ளது என அமெரிக்க தெரிவித்துள்ளது. ஆனால், தமது உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாமென இருநாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவின் இந்த முடிவை விமர்சித்துள்ளது. 




No comments

Powered by Blogger.