Header Ads

Ads Bar

பாரத் பச்சாவோ பேரணி: ‘“என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சாவர்க்கர் அல்ல”


ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திவரும் `பாரத் பச்சாவோ` பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றினார்.
இந்த பேரணியில் அவர் உரையாற்றுகையில்,
''நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என வெள்ளிக்கிழமை மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கூறினார்கள். அதாவது உண்மையை பேசியதற்கு என்னை மன்னிப்பு கேட்க கூறினார்கள். என் பெயர் ராகுல் காந்தி. ராகுல் சாவர்க்கர் இல்லை. அதனால் நான் மன்னிப்பு கோர மாட்டேன். காங்கிரஸை சேர்ந்த யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்'' என கூறினார் ராகுல் காந்தி.
இன்றைய நிலையில் ஜிடிபி நான்கு சதவீதமே உள்ளது. ஜிடிபி கணக்கிடும் முறையை பாஜக மாற்றியது. அப்படி மாற்றியே 4 சதவீதம்தான் உள்ளது. இதுவே பழைய முறையாய் இருந்தால் 2.5% தான் ஜிடிபி இருக்கும் என பொருளாதார மந்தநிலை குறித்து ராகுல் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மதங்களை அடிப்படையாக கொண்டு நாட்டை பிரித்து கொண்டிருக்கின்றனர். அசாம் , மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு போய் பார்த்தால் நரேந்திர மோதி அங்கே தீ மூட்டியிருக்கிறார் எனத் தெரியும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
''தொலைக்காட்சியில் முப்பது நொடிகள் தெரிந்தால் அதற்கு லட்ச கணக்கில் செலவு செய்யவேண்டியிருக்கும். ஆனால் மோதி நாள் முழுவதும் வருகிறார். இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது. மக்களின் பணத்தை எடுத்து யாரிடம் நரேந்திர மோதி தருகிறாரோ அவர்கள் கொடுக்கிறார்கள்'' என குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி. 


No comments

Powered by Blogger.