Header Ads

Ads Bar

குடியுரிமை திருத்த சட்டம்: போராட்டத்தில் பங்கேற்ற நார்வே மூதாட்டியிடம் விசாரணை


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட யானே மெட்டே ஜொஹன்சன்படத்தின் காப்புரிமைJANNE-METTE JOHANSSON / FACEBOOK
Image captionகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட யானே மெட்டே ஜொஹன்சன்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்ட நார்வே பெண்ணிடம் விசாரணை

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட நார்வே நாட்டை சேர்ந்த 71 வயது மூதாட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரை விசாரிக்க கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் பதிவு அலுவலகத்திற்கு அந்த மூதாட்டி அழைக்கப்பட்டார்.
யானே மெட்டே ஜொஹன்சன் இதுவரை ஐந்து முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரது விசா 2020 மார்ச் மாதம் முடிவடைகிறது.
இவரிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பதை தெரிவிக்க குடியேற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனினும், இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணியாக வருபவர்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என விதி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய யானே, "குடியுரிமை திருத்த சட்டத்திற்கான போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்தது. அங்கு அமைதியை வலியுறுத்தி பாடல்கள் பாடப்பட்டன. கவிதைகள் வாசிக்கப்பட்டன. எந்த விதமான வன்முறையோ கலவரமோ நடைபெறவில்லை. அது எப்படி இந்திய சட்டத்தை மீறுவதாக இருக்கும் என்று தெரியவில்லை," என தெரிவித்தார். 




No comments

Powered by Blogger.